News Update :

Saturday, February 23, 2019

TamilLetter

அமைச்சர் ரிஷாட்டின் ஏற்பாட்டில் இறை இல்லம் திறந்து வைப்பு

 அமைச்சர் ரிஷாட்டின் ஏற்பாட்டில் இறை இல்லம் திறந்து வைப்பு

வஹாப்தீன்




அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் கௌரவ ரிசாட் பதியுதீன் அவர்களின் ஏற்பாட்டின் மூலம் அட்டாளைச்சேனை பலமுனை ஹுசைனியா கிராமத்தில் கட்டி முடிக்கப்பட்ட ஹுசைனியா மஸ்ஜித் திறந்து வைக்கப்பட்டது.

 கட்டார் நாட்டைச்சேர்ந்த தனவந்தரின் நிதியீட்டத்தின் மூலம், கௌரவ அமைச்சர் ரிசாட் பதியுதீன் அவர்களின் வேண்டுதலின் பேரில் , 250 இடம் பெயர்ந்த குடும்பங்கள் வாழும் ஹுசைனியா கிராமத்தில் அமைக்கப்பட்ட இந்த அழகிய பள்ளிவாயில், பிரதம அதிதிகளாக கட்டார் நாட்டின் நிதியீட்டாளர்களும், விசேட அதிதியாக அக்கரைப்பற்று ACMC யின் பொறுப்பாளரான தொழிலதிபர் அப்துல்சமது அப்துல்பாசித் மௌலானா (JP) அவர்களும் அழைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸானது இடம் பெயர்ந்த மக்கள், அகதிகள், ஏழைகள் என சமூகத்தின் அடிமட்டத்திலுள்ள மக்களுக்கு வேண்டிய அத்தியவசிய தேவைகளை இன, மொழி, மத வேறுபாடின்றி வழங்குவதனையும் மிகப்பெரும் கடமையாக நினைத்து செயற்படும் ஒரு அரசியல் இயக்கமாகும். 

இதனால்தான் இந்தக்கட்சியும் , அதன் தலைமை ரிசாட் பதியுதீன் அவர்களும் நாட்டின் பெரும் பாலான மக்களினால் நேசிக்கப்பட்டு வரும் ஒரு சிறந்த அரசியல் அடையாளமுமாகும்...

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-