News Update :

Monday, February 25, 2019

TamilLetter

முன்னாள் அமைச்சரின் மகன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.


முஸ்னி முஸ்தபா 

பகுதியில் பொலிஸ் அதிகாரியை மோதிச் சென்ற டிபென்டர் ரக வாகனத்தின் சாரதி மற்றும்  மகிந்தானந்த அளுத்கமகேயின் மகன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய நால்வர் இன்று (திங்கட்கிழமை) அதிகாலை கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் றுவான் குணசேகர குறிப்பிட்டுள்ளார்.

பொரள்ள பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் பொலிஸ் அதிகாரி ஒருவரை மோதிச் சென்ற டிபென்டர் ரக வாகனம் பத்தரமுல்ல, காஹொட பூங்கா பகுதியில் வைத்து நேற்று  கைப்பற்றப்பட்டது.

எனினும் வாகனத்தால் மோதிய சாரதி தப்பியோடியிருந்த நிலையில், குறித்த வாகனத்தின் சாரதி மற்றும் மகிந்தானந்த அளுத்கமகேயின் மகன் உள்ளிட்ட ஐவர் சந்தேகத்தின் அடிப்படையைில்  இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் றுவான் குணசேகர மேலும் குறிப்பிட்டுள்ளார்.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-