கிராமப்புறங்களின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு அதிகமான நிதியொதுக்கீடுகளை செய்து வருபவர் ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளரும் நெடுஞ்சாலை வீதி அபிவிருத்தி அமைச்சர் கபீPர் ஹஸீம் அவர்கள் என ஐக்கிய தேசியக் கட்சியின் அக்கரைப்பற்று எழுவெட்டுவான் கிளை அமைப்பாளர் ஏ.எல்.நழிம் தெரிவித்தார்.
நெடுஞ்சாலை வீதி அபிவிருத்தி அமைச்சின் நிதியொதுக்கீட்டின் மூலம்; அக்கரைப்பற்றில் புனரமைக்கப்பட்ட இரண்டு வீதிகளை மக்கள் பாவனைக்காக திறந்து வைத்து விட்டு கருத்து தெரிவிக்கும் போதே இதனை இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் கடந்த அரசாங்கத்தால் கைவிடப்பட்ட பிரதேசங்களை நல்லாட்சி அரசாங்கம் பாரிய நிதியொதுக்கீட்டின் மூலம் அபிவிருத்தி செய்து வருகின்றது.
அந்த அடிப்படையில் நீண்ட காலமாக குன்றும் குழியுமாக காணப்பட்ட இந்த வீதிகளை கொங்கிரீட் வீதியாக மாற்றித்தருமாறு நாங்கள் ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளரும் அமைச்சருமான கபீர் ஹஸிமிடம் கோரிக்கை வைத்த போது எந்தவித தயக்கமும் இல்லாமல் நிதியை ஒதுக்கித்தந்தார்.
வீதி அபிவிருத்தி அமைச்சின் நிதி மூலம் நாடு பூராகவும் பாரிய அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் முடிவுற்று மக்களின் பாவனைக்காக திறந்தும் வைக்கப்பட்டுள்ளது.அதே போன்று இன்னும் பல திட்டங்களும் நடைபெற்று வருகின்றது.
இந்த திட்டங்களை நேரடியாக அமைச்சர் போய் திறந்து வைக்க வேண்டுமென்ற விருப்பம் அவரிடம் ஒரு போதும் இருந்ததில்லை வேலைத் திட்டங்கள் சிறப்பாக நடைபெற்றால் போதும் என்று நினைப்பவர்.
இப்படியான கிராமப்புற அபிவிருத்திகளை செய்துவரும் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சி நிலைத்து நிற்க வேண்டிய பொறுப்பு சமாதானத்தை நேசிக்கும் ஒவ்வெருத்தரின் கடமையாகும்.
இந்த ஆண்டு பல தேர்தல்கள் இடம்பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகமாகவுள்ளது எனவே நமது கட்சியை பலப்படுத்த வேண்டிய பொறுப்பு மக்களாகிய உங்களையே சாரும் என்றார் அமைப்பாளர் நழீம்