எச். வஹாப்தீன்
எதிரும் புதிருமாக செயற்பட்டுவருகின்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசும்,அகில இலங்கை மக்கள் காங்கிரசும் சில பொதுவான கொள்கையில் உடன்பட வேண்டியது அவசியமென முஸ்லிம் காங்கிரஸின் பெயர் குறிப்பிட முடியாத முக்கிய உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.
இன்று காலை எமது செய்தி நிறுவன ஊடகவியலாளர்களோடு குறிப்பிட்ட கட்சியின் முக்கியஸ்தர் சந்தித்து கலந்துரையாடிய போதே சில தகவல்களை அவர் பகிர்ந்து கொண்டார்.
அரசாங்கம் அரசியலமைப்பு திருத்தத்தை கொண்டு வருவதற்கு முயற்சி செய்து வரும் நிலையில் கட்சிகளின் கருத்துக்களை எழுத்து மூலம் வேண்டிக் கொண்டது.
புதிய அரசியலமைப்புக்கான பிரேரணையை அமைச்சர் ரிஷாட் பதியூதீன் தமது கட்சி சார்பாக முன்மொழிந்திருந்தார். அதில் வடக்கு கிழக்கு எக்காரணம் கொண்டும் இணைவதற்கு எமது கட்சி ஒரு போதும் சம்மதிக்காது என தெளிவான நிலைப்பாட்டை கூறியிருப்பது வரவேற்கத்தக்கது என முஸ்லிம் காங்கிரஸின் முக்கிய உறுப்பினர் தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் நான் அமைச்சர் ரிஷாட்டை வெளிப்படையாக பாராடடினால் எனது கட்சிக்குள் பெரும் பிரச்சினைகள் தோன்றும் அதன் காரணமாகவே எனது பெயரை பிரசுரிக்க வேண்டாம் என கேட்கிறேன் . ஊடகவியலாளர்கள் புதிய அரசியலமைப்பு தொடர்பாக மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டுமென்பதற்காகவே இந்த உண்மைகளை கூறுகின்றேன்.
முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கிம் புதிய அரசியலைப்பு பிரேரணையில் வடக்கு கிழக்கு தொடர்பான தெளிவான நிலைப்பாட்டை அறிவிக்கவில்லை என்பதே எனது கவலையாகும் என அவர் மேலும் குறிப்பட்டார்.