News Update :

Monday, February 11, 2019

TamilLetter

அதாஉல்லாவிடமிருந்து வைத்தியசாலை விடுபட்டது போல் பாடசாலைகளும் விடுதலை பெற வேண்டும்



அகமட் நஸார்



அச்சத்துடனும் சந்தேகத்துடனும் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு சிகிச்சை பெறச் சென்ற நோயாளர்கள் இன்று முழு நம்பிக்கையுடன் அவ் வைத்தியசாலையை நாடுகின்றனர்.

அதாஉல்லா அமைச்சராக இருந்த காலத்தில் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையை தனது அரசியல் நலன் சார்ந்த விடயங்களுக்காகவே பயன்படுத்தி வந்துள்ளார்.

தனது கட்சி சார்ந்தவர்களை ஊழியர்களாகவும், அபிவிருத்திக் குழு உறுப்பினர்களாகவும் நியமித்து தன் ஆதிக்கத்தை நிலைநிறுத்தினார்.

இவ்வாறான நிலையில் அரசியல் செல்வாக்குள்ள சில ஊழியர்கள் வைத்தியர்களுக்கும் தாதியர்களுக்கும் சவால் விடுக்கும் அளவிற்கு நிர்வாகத்தில் மூக்கை நுழைத்து வந்த காலமாக இருந்தது 

2015 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் அதாஉல்லா படுதோல்வியடைந்ததையிட்டு இவ் வைத்தியசாலை சுதந்தரக் காற்றை சுவாசிக்க தொடங்கியது.  

அரசியல் ரீதியான நியமனங்கள் அனைத்தும் தடுக்கப்பட்டு திறமையான நிர்வாகிகள் உள்வாங்கப்பட்டதுடன் சிறந்த வைத்திய நிபுணர்களும் ஆர்வத்துடன் தனது சேவையை வழங்க முன்வந்தனர்.

இக் குறிகியகால இடைவெளியில் இவ் வைத்தியசாலை பல சாதனைககளை புரிந்ததுடன் பல விருதுகளையும் பெற்று பலரையும் வியப்பில் ஆழ்த்தியது.

உள்ளக அபிவிருத்தியில் ஈடுபட்டுவந்த வைத்தியசாலை நிருவாகமும் வைத்திய நிபுணர்களும் பிரதேச அபிவிரத்தியிலும் தங்களை முழுமையாக ஈடுபடுத்தி அக்கரைப்பற்று நகரை பசுமை நகரமாக மாற்றுவதற்கான வேலைத்திட்டத்திலும் அவர்கள் சுதந்திரமாக இறங்கியுள்ளனர்.

இது இவ்வாறு இருக்கத்தக்க அதாஉல்லாவின் அரசியலிருந்து விடுபட்ட வைத்தியசாலை போல் அக்கரைப்பற்றிலுள்ள பாடசாலைகளும் அரசியல் விடுதலை பெறுவதன் மூலமே அக்கரைப்பற்றின் கல்வியில் பாரிய முன்னேற்றத்தை அடைய முடியுமென பல கல்வியாளர்கள் கருதுகின்றனர்.

இதற்கு பிரதான காரணமாக பாடசாலையின் அதிபர்களை அதாஉல்லாவின் அரசியல் அதிகாரத்தால் நியமித்தார். அரசியல் அதிகாரத்தால் நியமிக்கப்பட்டவர்கள் அதாஉல்லாவின் அரசியல் நலனுக்காகவே தமது கடமைகளை செய்ய முற்படுவதனால் நமது மாணவர்களின் பரிட்சை மதிப்பீடு கவலைக்கிடமாக மாறி வருகின்றது.

இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென்பதற்காகவே அரசியலைத்தாண்டி தகுதியான மற்றும் திறமையான அதிபர்கள் உள்வாங்கப்பட வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

தகுதியானவர்களை அடையாளம்கண்டு அவர்களை அதிபர்களாக நியமிக்கப்படும் சந்தர்ப்பத்தில்தான் அவர்கள் சுதந்திரமாக தமது கடமைகளை நிறைவேற்றூர்கள்;.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-