News Update :

Monday, February 4, 2019

TamilLetter

கண்ணீரை துடைக்க முற்பட்ட .இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி ஹரீஸ்




தென் கிழக்கு பல்கலைக்கழக பொறியியல் பீட இறுதியாண்டு மாணவர்கள் ஏழு பேர் கைது செய்யப்பட்ட நிலையில் இன்னும் அவர்கள் விடுதலை செய்யப்படவில்லை என்பது வருத்தமளிக்கின்றது.

இம் மாணவர்களது விடுதலை தொடர்பாக ஒரு சில அரசியல்வாதிகள் மாத்திரமே குரல் கொடுத்து வருவதுடன் அதற்கான நடவடிக்கைகளிலும் இறங்கியுள்ளனர்.

இம் மாணவரகளில் அதிகமாணவர்கள் கல்வியில் பின்தங்கிய கிரமாங்களிலிருந்து வந்தவர்கள்.இம் மாணவர்களின் பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளின் விடுதலைக்காக கண்ணீருடன் அலைந்து திரிகின்றனர்.
இந்த கண்ணீருக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென்பதற்காகவே பல முயற்சிகளை அம்பாரை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் களத்தில் நின்று செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்.

 சிறைக்கே சென்று மாணவர்களை சந்தித்து அவர்களுக்கு நம்பிக்கையூட்டி,தைரியப்படுத்தியதுடன் சிறை அதிகாரிகளிடம் மாணவர்களது பாதுகாப்பு, அவர்களது எதிர்காலம் பற்றியும் பேசியுள்ளதுடன் புராதண திணைக்கள அதிகாரிகளையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இப்படியான செயற்பாடுகளை ராஜாங்க அமைச்சர் ஹரீஸ் அவர்கள் மேற்கொண்டு வரும் வேளையில் பல்கலைக்கழக மாணவர் அமைப்போடும் கலந்துரையாடி அவர்களுக்கான சில உதவிகளையும் செய்துள்ளதோடு சம்மந்தப்பட்ட அமைச்சர் மற்றும் துறைசார்ந்தவர்களோடு மாணவர் அமைப்பு கலந்துரையாடுவதற்கும் ஏற்பாடு செய்திருந்தார்.

இருந்த போதும் இம் மாணவர்கள் கல்வி கற்கும் தென்கிழக்கு பல்கலைக்கழகம் இவர்களது விடுதலை தொடர்பாக என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்பது தெளிவில்லாமல் இருந்து வருவது முஸ்லிம் சமூகத்திற்கு செய்யும் பெரும் துரோகமாக பார்க்கப்படுகின்றது.




TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-