News Update :

Tuesday, February 5, 2019

TamilLetter

தவத்தின் கோரிக்கையை நிறைவேற்றினார் இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி ஹரீஸ் எம்.பி





முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவம் அவர்களின் வேண்டுகோளை ஏற்று அக்கரைப்பற்று மாநகர சபைக்கு, உள்ளூராட்சி மாகாண சபைகள் இராஜாங்க அமைச்சர் கௌரவ அல்ஹாஜ் எச்.எம்.எம். ஹரிஸ் அவர்களின் ஏற்பாட்டில் இறுக்கி இயந்திரம் (Compactor) ஒன்று வழங்கப்படவுள்ளது.


கடந்த 26.01.2019 ஆம் திகதி மாகாண சபைகள் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் கௌரவ எச்.எம்.எம். ஹரீஸ் அவர்களுடனான நேரடி கலந்துரையாடலில், அக்கரைப்பற்றில்தான் இலங்கையில் முதன்முதலில் வீட்டிற்கு வீடு திண்மக்கழிவு அகற்றும் செயற்பாடு ஆரம்பிக்கப்பட்டது. அது தவம் அவர்கள் அக்கரைப்பற்று பிரதேச சபை தவிசாளராக (தற்போதைய மாநகர சபை & பிரதேச சபை) இருந்த போது ஆரம்பிக்கப்பட்டு முழு நாட்டிற்கும் முன்னுதாரண திட்டமாக விரிவுபடுத்தப்பட்டது.

அதற்காக தவம் அவர்களுக்கு ஜனாதிபதி விருதும் கிடைத்தது. ஆனால் தற்போது மாநகர சபையால் மேற்கொள்ளப்படும் திண்மக்கழிவு அகற்றும் பணிகள் திருப்திகரமானதாக இல்லை.எனவே திண்மக்கழிவுகளை அகற்றும் செயற்பாட்டை மேம்படுத்தும் வகையில் முதற்கட்டத்திலேயே (Phase - 01) அக்கரைப்பற்று மாநகர சபைக்கு Compactor இயந்திரம் ஒன்று வழங்கப்பட வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

அதன் பிரகாரம் எதிர்வரும் 09.02.2019, ஆம் திகதி சனிக்கிழமை காலியில் இடம்பெறவுள்ள நிகழ்வொன்றில் இந்த compactor இயந்திரம் கையளிக்கப்படவுள்ளது. அக்கரைப்பற்று மாநகர சபையை முன்னிலைப்படுத்தி முதற்கட்டத்திற்கு கொண்டுவந்து இவ்வாறு compactor இயந்திரம் வழங்கி உதவும் இராஜாங்க அமைச்சர் கௌரவ எச்.எம்.எம். ஹரீஸ் அவர்களுக்கு எமது மனமார்ந்த நன்றிகள்.

மாநகர சபையின் ஆளும் தரப்பு வேறாக இருந்த போதிலும் - கட்சி வேறுபாட்டிற்கு அப்பால் நின்று - ஊரின் அபிவிருத்தி மற்றும் மேம்பாட்டிற்கு எப்படிப் பங்களிப்பு வழங்கலாம் என்பது தொடர்பில் - முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவம் முன்னுதாரணமாக செயற்பட்டிருக்கிறார். இதனை மாநகர சபை ஆளும் தரப்பினர் புரிந்து கொண்டு அக்கரைப்பற்று அபிவிருத்தியில் தடையாக இல்லாமல் எதிர்காலத்திலாவது ஒத்துழைப்பு நல்க முன்வர வேண்டும்.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-