News Update :

Wednesday, February 20, 2019

TamilLetter

ஊடகவியலாளரைத் தாக்கிய பொலிஸ் அதிகாரியைக் கைது செய்ய உத்தரவு!




 வீடொன்றின் மீது நேற்று பெற்றோல் குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தையடுத்து அங்கு சென்று வீடியோ பதிவில் ஈடுபட்டிருந்த ஊடகவியலாளரை தாக்கிய கோப்பாய் பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரியைக் கைது செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

 இந்த நிலையில் கோப்பாய் பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி யாழ்ப்பாணம் தலைமையக பொலிஸ் நிலையத்துக்கு அழைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். அவர் இன்று கைது செய்யப்பட்டு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்படுவார் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

கொக்குவில் கருவப்புலம் வீதியில் அமைந்துள்ள வீடொன்றின் மீது பெற்றோல் குண்டுகள் வீசி கும்பல் ஒன்று அடாவடியில் ஈடுபட்டுத் தப்பித்தது. அதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற ஊடகவியலாளர் குகராஜ் சம்பவம் தொடர்பான வீடியோ பதிவியில் ஈடுபட்டிருந்தார். இதன்போது அவரின் பணியைத் தடுக்கும் வகையில் கோப்பாய் பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி செயற்பட்டதுடன், முகத்தில் தாக்கினார் .

தாக்குதலுக்குள்ளான செய்தியாளர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றார். அத்துடன் அவரிடம் பொலிஸ் முறைப்பாடும் பெறப்பட்டது.

இது தொடர்பில் வடக்கு மாகாண மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கு தகவல் வழங்கப்பட்டது. சம்பவ தொடர்பில் உடனடி விசாரணைக்கு யாழ்ப்பாணம் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் – 2 இற்கு அறிவுறுத்தல் வழங்கினார்.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-