அம்பாரை மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரசுக்கு சவால் விட்டிருந்த முக்கிய இரு கட்சிகளின் இரு முக்கிய விக்கட்டுக்களை குறிபார்த்து சுட்டு வீழ்த்தியுள்ளார் முஸ்லிம் காங்கிரஸின் இராஜாங்க அமைச்சர்
கிழக்கு மாகாண முழுவதும் மூன்று சமூகங்களுக்கும் பாரிய அபிவிருத்தி திட்டங்களை நடைமுறைப்படுத்தி தனது கட்சியின் செல்வாக்கை உயர்தி பலம் பொருந்திய நபராக தன்னை அடையாளமிட்ட அரசியல் பிரமுகரை அக்கட்சியிலிருந்து தன் சாணக்கியத்தால் விலக்கி சாதனை படைத்துள்ளார்
அதே போல் கடந்த உள்ளுராட்சி சபைத் தேர்தலில் சுமார் 40 ஆயிரம் வாக்குகளைப் பெற்ற இன்னுமொரு கட்சியின் முக்கிய விக்கட்டும் இந்த இராஜாங்க அமைச்சரினால் முஸ்லிம் காங்கிரஸின் கைகளில் வருவதற்கு தயாராகிக் கொண்டிருக்கின்றது.
பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டதும் முஸ்லிம் காங்கிரஸில் இணைந்து கொள்வதற்கு மாற்றுக் கட்சியின் இந்த முக்கியஸ்தர் இணக்கம் தெரிவித்துள்ளதோடு அதிகாரங்கள் பகிர்ந்தளிப்பது தொடர்பாகவும் விரிவாக ஆராயப்படவுள்ளது.
எது எப்படியோ சவால்கள் இல்லாத தேர்தலை முஸ்லிம் காங்கிரஸ் எதிர்வரும் காலங்களில் சந்திக்கவுள்ளது.
இச் சூழலை ஏற்படுத்திய இராஜாங்க அமைச்சருக்கு முஸ்லிம் சமூகம் நன்றியை தெரிவிக்கின்றது.