News Update :

Saturday, February 2, 2019

TamilLetter

நானே என்றும் ராஜா மைத்திரிக்கு இடமில்லை - மஹிந்த திட்டவட்டம்


தேர்தலுக்கான புதிய கூட்டணிக்கு தலைமை தாங்கும் அதிகாரம் தனக்கே கிடைக்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கூட்டு எதிர்க்கட்சியின் தலைவராக இப்போதும், தானே செயற்பட்டு வருவதாகவும், அஸ்கிரிய, மல்வத்த பீடாதிபதிகளை சந்தித்த பின்னர் அவர் கூறியுள்ளார்.

 “ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அடுத்த ஜனாதிபதி வேட்பாளராக வேண்டும் என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியினரால் நிறைவேற்றப்பட்ட யோசனை துமிந்த திஸாநாயக்கவின் தனிப்பட்ட யோசனை ஆகும்.

மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்த நான் திட்டமிடவில்லை. இன்னமும் அது தொடர்பில் தீர்மானம் எடுக்கவில்லை.

இதுவரை காலமும் சுதந்திர தின நிகழ்வு என கொண்டாடிய போதிலும் இம்முறை சுதந்திர தினமா அல்லது தேசிய தினமாக கொண்டாடுகின்றோம் என்பது இன்னமும் எனக்கு புரியவில்லை.

 நாட்டில் சுதந்திரம் இல்லாத காரணத்தினால் தேசிய தின நிகழ்வு என பெயரிட்டிருக்கலாம் என மஹிந்த மேலும் தெரிவில்லை.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-