News Update :

Sunday, February 3, 2019

TamilLetter

மாகாண சபை வேட்பாளராக பொத்துவில் பிரதேசத்தைச் சேர்ந்த அப்துல் ரஹீம்

 குல்ஸான் எபி


இன்னும் சில மாதங்களுக்குள் கிழக்கு மாகாண சபைத் தேர்தலுக்கான  அறிவிப்பு வெளிவரயிருக்கும் நிலையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக பொத்துவில் பிரதேசத்திற்கான வேட்பாளராக ஹில்டன் அப்துல் ரஹீம் களமிறக்கப்படுவதற்கான வாய்ப்புகள் காணப்படுகின்றன.

முஸ்லிம் காங்கிரஸின் மூத்த போராளியான அப்துல் ரஹீம் கடந்த உள்ளுராட்சி சபைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றியீட்டிய நிலையில் அவருக்கு வழங்கப்படவிருந்த தவிசாளர் பதவியை விட்டுக் கொடுத்து கட்சியின் ஒற்றுமைக்கு வித்திட்டார்.

 தலைமைத்துவ கட்டுப்பாட்டுடன் செயலாற்றிக் கொண்டிருக்கும்   அப்துல் ரஹீம் பாராட்டப்பட வேண்டியவர்.இதன் காரணமாகவே     மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட  சந்தர்ப்பம் வழங்கி இவரை கௌரவிக்கவுள்ளது.

2008ம ஆம் ஆண்டு நடைபெற்ற முதலாவது கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் பொத்துவிலை பிரதிநிதித்துவப்படுத்தும் முகமாக எஸ்.எஸ்.பி மஜீட் முஸ்லிம் காங்கிரஸில் போட்டியிட்டு வெற்றி பெற்ற போதும் அப்பதவியை தக்க வைக்க முடியாமல் அவர் கட்சி மாறியிருந்தார்.

இப்படியான நிலையில் மாகாண சபை வெற்றிடத்தை நிரப்பும் வகையில் கட்சியின் ஆரம்ப கால போராளியான தொழிலதிபர் அப்துல் ரஹீம் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.

சமூக சேவையில் தன்னை முழுமையாக ஈடுபடுத்தி வரும் அப்துல் ரஹீம் இளைஞர்களின் நம்பிக்கை பெற்ற அரசியல்வாதியாக தன்னை அடையாளப்படுத்தியுள்ளார்.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-