News Update :

Thursday, February 14, 2019

TamilLetter

இராஜாங்க அமைச்சர் ஹரீஸின் அதிரடி நடவடிக்கை - கல்வி சமூகம் பாராட்டு



மாற்றுக் கட்சியைச் சேர்ந்தவர்கள்  என்ன பதவியில் இருந்தாலும் ஈகோ பார்க்காமல் மக்களின் நலனுக்காக செயற்படுவது பாராட்டத்தக்கது.

அந்த வகையில் நீண்ட கால தேவையாக கருதப்பட்ட  கல்முனை மஃமூத் மகளிர் கல்லூரியினை தேசிய பாடசாலையாக தரமுயர்த்துவதற்கான வேலைத்திட்டத்தை  இராஜாங்க அமைச்சர் ஹரீஸ் ஆரம்பித்துள்ளார்.

   கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வை ஆளுநர் ஆலுவலகத்தில் சந்தித்த    இராஜாங்க அமைச்சர்  குறித்த பாடசாலையினை தரமுயர்த்துவதற்கான ஆளுநரின் சம்மதத்தையும் பெற்றார்.
 

இதன் போது மஃமூத் மகளிர் கல்லூரியினை தேசியபாடசாலையாக தரமுயர்த்தும் நடவடிக்கையினை விரைந்து முன்னெடுக்குமாறு ஆளுநரினால் கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரி.ஏ. நிசாம் ஆளுநரினால் அறிவுறுத்தப்பட்டார்.

 
இதற்கமைவாக மாகாண கல்வித் திணைக்கள அதிகாரிகள் இன்று குறிப்பிட்ட பாடசாலைக்கு சென்று களமதிப்பீட்டில் ஈடுபட்டனர்.முறையான ஆவணங்கள் தயாரிக்கப்பட்டதும் கல்வியமைச்சரினால் இப்பாடசாலை தேசிய பாடசாலையாக அறிவிக்கப்படும்.


இராஜாங்க அமைச்சரின் துார நோக்க சிந்தனைக்கு அப் பிரதேச கல்வியாளர்கள் பாராட்டு தெரிவிக்கின்றனர்.


TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-