News Update :

Thursday, February 14, 2019

TamilLetter

அதாஉல்லா மாநகர சபையை வென்றது எப்படி? இரகசியத்தை வெளியிட்டார்




அக்கரைப்பற்று மாகநர சபையை நாங்கள் வென்று விட்டோம் என மார்தட்டும் தேசிய காங்கிரஸ். நாங்கள் எப்படி வென்றோம் என்பது தொடர்பான உண்மைத்தன்மையை இன்னும் அறியவில்லை என அக்கரைப்பற்று பிரதேச அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் வட்டாரத் தலைவர் ஹஸீம் தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்

கடந்த உள்ளுராட்சி சபைத் தேர்தலில் நாடு பூராகவும் எமது கட்சி போட்டியிட்டு அதிகமான உள்ளுராட்சி சபை உறுப்பினர்களை பெற்றுக் கொண்டோம்.

அதே போல் அக்கரைப்பற்று மாநகர சபைக்கான தேர்தலில் எமது கட்சி களமிறங்குவதற்கான முன் ஏற்பாடுகள் செய்திருந்த போதும் குறிப்பிட்ட நேரத்திற்குள் வேட்புமனு சமர்ப்பிக்கபடவில்லை இதன் காரணமாக எமது வேட்புமனு நிராகரிக்கப்பட்டன்.

சபையை வென்றெடுப்பதற்கான களநிலவரம் இருந்தும் ஐக்கிய தேசியக் கட்சியோடு முஸ்லிம் காங்கிரஸ் இணைந்து போட்டியிட்ட காரணத்தினால் நான்கு ஆசனங்களை மாத்திரமே அக்கட்சியால் பெற முடிந்தது. அதே போல் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் மூன்று ஆசனங்களை பெற்றிருந்தது.

இந்த நிலையில் மக்கள் காங்கிரசும் களத்தில் நின்றிருந்தால் அதிகமான ஆசனங்கள் எமக்கு கிடைத்திருக்கும் இதனால் யாரும் தனித்து ஆட்சியமைக்க முடியாத சூழ்நிலை ஏற்படுவதுடன் தேசிய காங்கிரஸைவிட எதிர்க்கட்சிகளுக்கு கூடுதல் ஆசனங்கள் கிடைத்திருக்கும்.

மட்டக்களப்பு மாநகர சபையில் இடம் பெற்றது போல் குறிப்பிட்ட என்னிக்கையை விட அதிகமான ஆசனங்களை மேலும் ஒதுக்க தேர்தல் திணைக்களம் முன்வந்திருக்கும்.

இன்று அக்கரைப்பற்று மாநகர சபையின் நிர்வாகம் எப்படியுள்ளது என்பதை மக்கள் தெளிவாக புரிந்து கொண்டுள்ளனர். முறையான எந்த வேலைத்திட்டத்தையும் நடைமுறைப்படுத்தாமல் எதிர்க்கட்சிக்காரர்கள் கொண்டு வரும் திட்டங்களை எப்படி தடுத்துவிடாலாம் என்பது தொடர்பாகவே மேயரும் அக்கட்சியின் உறுப்பினர்களும் கூட்டம் போட்டு சிந்திக்கின்றனர்.

அது மட்டுமல்லாமல்; நாம் என்ன செய்தாலும் அக்கரைப்பற்று மக்கள  நம்மை கேள்வி கேட்க மாட்டார்கள் என தேசிய காங்கிரஸ் காரர்கள் தைரியமாக கூறிவருகின்றனர்.

அக்கரைப்பற்று படித்த ஊர் என்கின்றார்கள் ஆனால் அவர்களை ஆள்பவர் எப்படியான தகுதி நிலையில் உள்ளார் என்பதை இன்னும் அம் மக்கள் சிந்திக்கவில்வை என்பது வெட்கக் கேடானது என்றார் ஹஸீம்.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-