முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் நல்லவர் அமைச்சர் ரிஷாட் மிக கெட்டவர் அவரோடு இணைந்தா? நாம் ஆட்சியமைப்பது என ஊடகவியலாளர் முன்னிலையில் கூறியவர் முன்னாள் அமைச்சர் அதாஉல்லா என்றார் முன்னாள் மாகாண அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை
தனது ஆதரவாளர்கள் மத்தியில் தனது அரசியல் நிலைப்பாடு தொடர்பாக விளக்கமளிக்கும் போதே இதனை அவர் தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்
அட்டாளைச்சேனை பிரதேச சபையின் அதிகாரத்தை நாம் கைப்பற்ற வேண்டிய சூழ்நிலை இருந்தும் அதாஉல்லாவினால் அது தடுக்கப்பட்டிருந்தது.எந்த தலைவராவது தனது கட்சி அதிகாரத்திற்கு வருவதை விரும்பாமல் இருந்திருப்பார? ஆனால் இந்த தலைவர் தனது கட்சி அதிகாரத்திற்கு வருவதை விரும்பவில்லை.
ரவூப் ஹக்கீம் வாழ்க என அதாஉல்லா கூறினார். அப்படியானால் அவர் வாழ்த்திய ரவூப் ஹக்கிமின் கட்சியில் நான் இணைவதில் என்ன தப்பு உள்ளது எனவும் கேள்வியெழுப்பியிருந்தார் உதுமாலெப்பை.
முஸ்லிம் காங்கிரஸ் எனது தாய் வீடு இதில் இணைவதில் எனக்கு சங்கடமில்லை.முஸ்லிம் காங்கிரசை நீதி மன்னறத்தில் வழக்கு போட்டு கட்சியின சின்னத்தைப்பறித்த ஹபீஸ் நஸீர் மீண்டும் கட்சியில் இணைந்து முதலமைச்சர் ஆகலாம் என்றால் ஏன நான் வளர்த்த கட்சியில் இணைய முடியாது என்று மேலும் அவர் தெரிவித்தார்.