News Update :

Thursday, February 7, 2019

TamilLetter

அட்டாளைச்சேனையில் வெல்லப் போகும் அரசியல்வாதி - பலப்பரிட்சை தொடங்கியது



அட்டாளைச்சேனை பிரதேச சபைக்குட்பட்ட இரண்டு மைதானங்களில் எந்த மைதானத்தை அபிவிருத்தி செய்யப்படப் போகுது என்ற பரபரப்பான நிலமை இன்று தொடர்ந்த வண்ணம் உள்ளது.

நியூ ஸ்டார் விளையாட்டுக் கழகத்தின் முயற்சியினால் கிழக்கு மாகாண விளையாட்டுத்துறை அமைச்சினால் அட்டாளைச்சேனை கோணவத்தை மைதான அபிவிருத்திக்கு சுமார் இரண்டு மில்லியன் ரூபா நிதி ஓதுக்கப்படவிருந்த வேளையில் அந் நிதி வேறு ஒரு மைதானத்தின் அபிவிருத்திக்காக மாற்றப்பட்டுள்ளதாக ஒரு குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது.

இக் குற்றச்சாட்டு தொடர்பாக சம்மந்தப்பட்ட தரப்பினர் தெரிவிக்கையில் கோணவத்தை மைதானத்தின் அபிவிருத்தி தொடர்பாக இதுவரையும் யாரும் எங்களிடம் பேசவில்லையெனவும் மைதானம் தேவைப்பட்டவர்கள் வேண்டிக் கொண்டதற்கிணங்க பாலமுனை பிரதேசத்தில் றக்பி மைதானம் அமைப்பதற்கே தான் நிதியுதவி பெற்றுக் கொடுக்க முன்வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளதோடு யார் தடுத்தாலும் றக்பி மைதானம் அமைத்தே தீருவோம் எனவும் சவால் விடுக்கப்பட்டுள்ளதாக பேசப்படுகின்றது.

ஏற்கனவே பரிசிலிக்கப்பட்ட மைதானத்தின் அபிவிருத்தி திட்டமிட்டபடி நடைபெரும் எனவும் இது தொடர்பாக கிழக்கு ஆளுநர் சம்மதித்துள்ளார் எனவும் குறிப்பிட்ட அரசியல்வாதியால் என்னை மீறி எதுவுமே செய்ய முடியாது என இன்னும் ஒரு அரசியல்வாதி களத்தில் இறங்கியுள்ளார. 

இரண்டு அரசியல் வாதிகளுக்கு மத்தியில் இன்றெழுந்துள்ள மைதான அபிவிருத்தியில் எந்த மைதானம் அபிவிருத்தி செய்யப்படவுள்ளது? இதில் யார் அரசியல் பலம் வாய்ந்தவர்? என்ற பலப்பரிட்சையில் வெற்றி பெறப் போகின்ற அரசியல்வாதி யார்?

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-