News Update :

Friday, February 1, 2019

TamilLetter

கிழக்கு மாகாண சபையின் அடுத்த முதல்வர்?

ஏ.எல்.றமீஸ்

நாட்டில் அடுத்து வரும் மாகாண சபைத் தேர்தல் பழைய விகிதாசார தேர்தல் முறையின் கீழ் நடைபெறுவதற்கான சாத்தியப்பாடுகளே அதிகம் காணப்படுகின்றது.

உள்ளுராட்சி சபைத் தேர்தலில் ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள்  மாகாண சபையிலும் ஏற்படக் கூடாது என்பதற்காக பழைய முறைமைக்கே மாகாண சபைத் தேர்தல் நடைபெற வேண்டுமெனபதே கட்சிகளின் விருப்பமாகவுள்ளது.

எந்த முறையில் தேர்தல் நடைபெற்றாலும் தனியொரு கட்சியினால் கிழக்கு மாகாண சபையின் ஆட்சியை கைப்பற்ற முடியாத கள நிலவரம் இங்கு அதிகமாகவுள்ளது.

கிழக்கை பொறுத்தவரைக்கும் தனியொரு பெரும்பான்மை கட்சியாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு இருந்த போதும் ஆட்சியமைப்பதற்கு தேவையான 19 ஆசனங்களை இக் கட்சியால் தனித்து நின்று  பெற முடியாது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் ஆதரவைப் பெற்ற பொதுஜன பெரமுன அம்பாரை மற்றும் திருகோணமலை மாவட்ட சிங்கள மக்கள் மத்தியில் அதிகமான செல்வாக்கை பெற்று வருகின்றது.இருந்த போதும் தமிழ் முஸ்லிம் மக்களின் வாக்குகளை பெறக் கூடிய எந்த  நல்லெண்ண நடவடிக்கையிலும் இக் கட்சி ஈடுபடவில்லை என்பதுடன் இக் கட்சியோடு பிற கட்சிகள் கூட்டுச் சேர்வதற்கும் தயக்கம் காட்டி வருகின்ற காரணத்தால்  தனித்து நின்றே தேர்தலில் போட்டியிட வேண்டிவரும்.    

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்தே பயணத்தை மேற்கொள்ளும் தீர்மானத்தை மேற்கொண்டாலும் அம்பாரை மாவட்டத்தில் இது வேறுபடும்.

   ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டு சேர்வதற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பெரும் தடையாகயிருக்கும். இதனால் அம்பாரையில் மாத்திரம் அ.இ.ம.க தனித்து போவதற்கே வழிசமைக்கும்.

இதே வேளை மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டங்களில்  ஐக்கிய தேசியக் கட்சியோடு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் இணைந்து போட்டியிடும் இதில் முஸ்லிம் காங்கிரஸ் இணைந்து கொள்ளுமா? என்ற கேள்வியுள்ளது.  ஏனென்றால்  கடந்த பொதுத் தேர்தலில் திருகோணமலையில் விருப்பு வாக்கு அடிப்படையில் பின்னுக்கு தள்ளப்பட்டு ஆசனத்தை இழந்த முஸ்லிம் காங்கிரசுக்கு மீண்டும் இப்படியான ஒரு கசப்பான நிகழ்வு அமைந்து விடுமா? ஏன்ற அச்சம் பெரிதும் உள்ளது.

அதே போல் முஸ்லிம் காங்கிரஸ் ஐக்கிய தேசியக் கட்சியோடு இணைவதை  அம்பாரை மாவட்டத்திலுள்ள பெருவாரியான முஸ்லிம்கள் விரும்பவில்லை. இதற்கு பிரதான காரணமாக ஐக்கிய தேசியக் கட்சியின் அமைப்பாளரும் அமைச்சருமான தயா கமகேயின் அண்மைக் கால செயற்பாடுகளாகும்.

இதையும் தாண்டி முஸ்லிம் காங்கிரஸ் ஐக்கிய தேசியக் கட்சியோடு இணையுமாகயிருந்தால் முஸ்லிம் காங்கிரஸின் வாக்கு வங்கியில் பாரிய வீழ்ச்சி ஏற்படுவதற்கான  பேராபத்தும் முஸ்லிம் காங்கிரசுக்கு உண்டு.

முஸ்லிம் காங்கிரஸ் ஐக்கிய தேசியக் கட்சியை விட்டு விலகி தனித்து போட்டியிட முன்வந்தால் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டுச் சேர்வதை முஸ்லிம் காங்கிரஸால் தடுக்க முடியாமல் போய்விடுவதோடு அம்பாரை மாவட்டத்தின் வெற்றியை முஸ்லிம் காங்கிரஸ் இழந்து விடும்.

அம்பாரை மாவட்டத்தில் மட்டும் செயற்பட்டுவரும் தேசிய காங்கிரஸ் ஜனாதிபதி மைத்திரபால சிறிசேன தலைமையேற்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியோடு கூட்டிணைந்து போட்டியிடுவதேயே இக் கட்சியின் தலைவர் அதாஉல்லா விரும்பினாலும் இக் கூட்டிணைவு மாவட்டத்தை வெற்றி கொள்ளும் அளவிற்கு எந்த தாக்கத்தையும் மக்கள் மத்தியில் ஏற்படுத்தாமல் போய்விடும

ஆளுநர் ஹிஸ்புல்லா முன்னாள் முதலமைச்சர் நஜீப் ஏ.மஜீத் ஆகியோர் மட்டக்களப்பு திருகோணமலை மாவட்டங்களில் சுதந்திரக்கட்சிக்கு தலையேற்றாலும் மட்டக்களப்பு மாவட்டத்தை தமிழ் தேசியக் கூட்டமைப்பும்  திருகோணமலையை ஐக்கிய தேசிய முன்னணியுமே வெற்றி கொள்ளும்.
ஓவ்வொறு கட்சியும் தனித்து போட்டியிட்டால்


அம்பாரை மாவட்டம் - சுமாரான எண்ணிக்கை
பொதுஜன பெரமுன – 55 ஆயிரம் வாக்குகள் - 2 ஆசனம்
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி – 45 ஆயிரம் வாக்குகள் - 2 ஆசனம்
ஐக்கிய தேசியக் கட்சி -  50 ஆயிரம் வாக்குகள் - 2 ஆசனம்
தமிழ் தேசியக் கூட்டமைப்பு – 50 ஆயிரம் வாக்குகள் - 2 ஆசனம்
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் - 40 ஆயிரம் - 2 ஆசனம்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் - 70 ஆயிரம் 3 ஆசனம்
தேசிய காங்கிரஸ் - 25 ஆயிரம் - 1 ஆசனம்
ஜே.வி.பி – 8 ஆயிரம் - ஆசனம் இல்லை

கூட்டியிணைந்தால்;

சுதந்திரக் கட்சி – தேசிய காங்கிரஸ் 70 ஆயிரம்- 3 ஆசனம்
ஐக்கிய தேசியக் கட்சி – முஸ்லிம் காங்கிரஸ் 120 ஆயிரம் 6 ஆசனம்
ஐக்கிய தேசியக் கட்சி – மக்கள் காங்கிரஸ் 90 ஆயிரம் 4 ஆசனம்
தமிழ் தேசிய கூட்டமைப்பு-முஸ்லிம் காங்கிரஸ-; 120ஆயிரம் 6 ஆசனம்
ஐ.தே.க – மு.கா- அ.இ.ம.கா – 160 ஆயிரம் 8 ஆசனம்
பெரமுன – தேசிய காங்கிரஸ் - 70 ஆயிரம் 3 ஆசனம்
பெரமுன – சுதந்திரக் கட்சி – தேசிய காங்கிரஸ் - 115ஆயிரம் 5ஆசனம்

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-