News Update :

Friday, February 1, 2019

TamilLetter

அக்கரைப்பற்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மூன்றாவது கூட்டம்






 
வஹாப்டீன் எம்.எச்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் செயற்குழுக்கூட்டமானது, அக்கரைப்பற்று கட்சிப்பணிமனையில் கட்சியின் கௌரவ தலைவர் ரிசாட் பதியூதின் அவர்களினால் நியமிக்கப்பட்ட, பிரபல தொழிலதிபரும் கட்சியின் தீவிர செயற்பாட்டாளருமான பாஸித், அரசியலிலே நீண்ட அனுபவம் கொண்ட ஆதம்லெவ்வை மர்ஜூன் (டெஸ்க்கா) போன்றோரின் தலைமையில் கூடியது.....

அக்கரைப்பற்று பிரதேச சபையின் ACMC உறுப்பினரான Mr.நஜீப், கிராமிய கைத்தொழில் அமைச்சர் அமீர்அலி அவர்களின் இணைப்பாளர் MI நிர்பான், மற்றும் ஊர்ப்பிரமுகர்களும் பிரசன்னமாயிருந்தனர்.

இந்நிகழ்வுக்கு ஓய்வு பெற்ற பல்கலைக்கழக உபவேந்தரும், கட்சியின் அம்பாறை மாவட்ட கௌரவ நாடாளுமன்ற உறுப்பினருமான இஸ்மாயில் sir அவர்கள் கௌரவப்பிரதிநிதியாக வருகை தந்திருந்தார்.

கட்சியின் அரசியல் பற்றாளரான M.I.A.R.புஹாரியினால் ஆரம்பவுரை நிகழ்த்தப்பட்டு கூட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் இஸ்மாயில் அவர்கள் அக்கரைப்பற்று மக்களின் பிரச்சினைகளை கேட்டறிந்தார். அவ்வமயம் வருகை தந்திருந்த சம்பந்தப்பட்டவர்களால்
நுரைச்சோலை சுனாமி வீட்டு பிரச்சினை,நுரைச்சோலை கரும்புக்காணிப்பிரச்சினை,,வட்டமடு காணிப்பிரச்சினை,
என  ஏனைய காணிப்பிரச்சினைகளும் முன் வைக்கப்பட்டன.

இதிலே  நுரைச்சோலை சுனாமி வீட்டுத்திட்டம் சம்பந்தமாக தலைவர் ரிசாட்டபதியுதீன் அவர்கள் ஜனாதிபதியுடன் , நாட்டின் இன விகிதாசாரப்படியல்லாமல் மாவட்ட இன விகிதாசாரப்படி வழங்குமாறு வலியுறுத்தியிருப்பதாக தெரிவித்தார்.

ஏனைய காணிப்பிரச்சினைகள் சம்பந்தமாக கிழக்கின் ஆளுனரான கௌரவ MLAM.ஹிஸ்புல்லா அவர்களுடன் தலைவர் ரிசாட் பதியுதீன் அவர்கள் பேசி இணக்கம் கண்டிருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

கம்ப்ரெலிய கிராம எழுச்சித்திட்டம் சம்பந்தமாகப்பேசும் போது .....
தனது நிதியொதுக்கீட்டின்கீழ் சகல பிரதேசங்களுக்கும் சமமான ஒதுக்கீடுகள் செய்திருந்த போதும் அவசியம் ஏற்படும் பட்சத்திலே குறிப்பிட்டளவு மேலதிக நிதியொதுக்கீடு செய்து தருவதாகவும் உறுதியளித்தார்...

கட்சியின் முக்கியஸ்த்தராக அக்கரைப்பற்றிலே தன்னைக்காட்டிக்கொண்டிருந்த ஹனிபா மதனியின் ஞானதாரருக்கு விடுதலை வேண்டி அண்மையில் வெளியிட்டிருந்த அறிக்கை சமபந்தமாக கட்சியின் ஆதரவாளர்களினால் காரசாரமாக விமர்சர்சனங்கள் முன் வைக்கப்பட்டன...

முஸ்லீம்களின் உயிர்களையும் உடமைகளையும் நாசம் செய்வதர்க்கு கால்கோலாயிருந்த ஞானதேரருக்கு விடுதலை வேண்டி போராடும் அதிகாரத்தினை ஒரு முஸ்லீமான ஹனிபா மதனிக்கு யார் கொடுத்தது? கௌரவ தலைவருடன் அரசியலில் தன்னைத்தானே விளம்பரப்படுத்திய மதனிக்கு தலைமைத்துவம் தக்க நடவடிக்கை எடுக்கவேண்டுமென வருகை தந்திருந்த கட்சியின் விசுவாசிகள் வேண்டிக்கொண்டனர்.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-