News Update :

Wednesday, February 6, 2019

TamilLetter

`ஹரீஸ் எம்.பி பிரதேசவாத அரசியல்வாதியல்ல - முஸ்லிம் சமூகத்தின் தலைவன்



கடந்த காலங்களிலும் சரி இன்றை நிலையிலும் சரி பிரதேசவாதத்தை மையப்படுத்தி அபிவிருத்தி செய்து வரும் அரசியல் வாதிகளுக்கு மத்தியில் சமூக அரசியலையும் அபிவிருத்தியையும் முறையாக செய்து வருபவர் உள்ளுராட்சி மாகாண சபை இாஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ்

தான் இராஜாங்க அமைச்சராக பதவியேற்று ஒரு குறிப்பிட்ட நாட்களுக்கிடையில் அம்பாரை மாவட்டத்திலுள்ள  சிங்கள, முஸ்லிம் ,தமிழ் உள்ளுராட்சி சபைகளுக்கும் அத்தியவசியமாக தேவைப்படுகின்ற இறுக்கி இயந்திரங்களை வழங்குவதற்கு முன்வந்துள்ளார்.

அதனடிப்படையில்
1.கல்முனை மாநகர சபை
2.அக்கரைப்பற்று மாநகர சபை
3 பொத்துவில் பிரதேச சபை
4.அட்டாளைச்சேனை பிரதேச சபை
5. சம்மாந்துறை பிரதேச சபை
6 நிந்தவூர் பிரதேச சபை
7. இறக்காமம் பிரதேச சபை
8.கரைதீவு பிரதேச சபை
9,தமன
10,உகன என பத்து சபைகளுக்கு எதிர்வரும் ஒன்பதாம் திகதி காலியில் நடைபெறும் நிகழ்வொன்றில் வைத்து இறுக்கி இயந்திரங்களை கையளிக்கவுள்ளார்.


TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-