News Update :

Thursday, February 7, 2019

TamilLetter

புலிகளின் தலைவரின் கரங்களை பலப்படுத்திய அம்பாரை மாவட்ட தமிழன்



தமிழர் தாயக விடுதலைப் போராட்ட வரலாற்றில் தென் தமிழீழம் அம்பாறை மண்ணில் இருந்து தமிழ் மக்களது தேசிய விடுதலை போரில் தனது மகத்தான பங்களிப்பை வழங்கியதுடன் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவரின் கரங்களை பலப்படுத்திய தனிப்பெரும் தமிழனும் தமிழர் விடுதலைக் கூட்டனியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாமனிதர் அரியநாயகம் சந்திரநேருவின் நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்பட்டது.

மட்டு அம்பாறை அரசியல்த்துறை பொறுப்பாளர் கௌசல்யனுடன் வீரகாவியமான மாவீரர்களினதும் 14ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் மூங்கிலாறு அரசியல்த்துறை செயலகத்தில் இன்று காலை 9:30மணியளவில் நடைபெற்றது.

நினைவேந்தலில் பொதுச்சுடரினை பிரதேச சபை உறுப்பினர் ஆ. ஜோன்சன் ஏற்றி வைத்ததுடன் மாவீரர்களது பெற்றோர்களினால் மலர்வணக்கம் செலுத்தப்பட்டு நினைவேந்தல் நிகழ்வுகள் நிறைவு பெற்றன.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-