News Update :

Saturday, February 9, 2019

TamilLetter

தமிழ் தாய் முஸ்லிம் தாய் குழந்தை யாரிடம் - நீதிமன்றம் பரபரப்பான தீர்ப்பு



இலங்கை களுத்துறை மாவட்டத்தில் இருக்கும் ஆதரவற்ற பெண் ஒருவர் பிரசவ சமயத்தில் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அந்த நேரத்தில் அங்கிருந்த முஸ்லீம் பெண் ஒருவர் உதவி செய்துள்ளார்.

,இப்படியான நிலையில் இவர்கள் இருவருக்கும் இடையே நல்ல உறவு ஏற்பட்டுள்ளது. ஆதரவற்ற பெண்ணை தனது இல்லத்திற்கு அழைத்து சென்ற முஸ்லீம் பெண். அவருக்கு அடைக்கலம் கொடுத்து வந்ததுடன் அக் குழந்தையையும் முஸ்லீம் பெண் வளர்த்து வந்துள்ளார்.

அந்த குழந்தையை வளர்த்த முஸ்லீம் பெண்., குழந்தையின் மீது கொண்ட பேரன்பால் குழந்தையை தாமே கவனித்து கொள்வதாக தெரிவித்துள்ளார்.

இதற்கு மறுப்புத் தெரிவித்த  தமிழ் பெண் ., தான் பெற்றெடுத்த குழந்தை என்று கூறவே., இவர்கள் இருவருக்கும் வாக்குவாதம் முற்றி  கடைசியில் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இவர்களின் புகாரை ஏற்ற காவல் துறையினர் விசாரணை மேற்கொண்ட போது., மருத்துவமனையில் பிரசவத்திற்க்காக சென்ற பெண் இந்து மதத்தை சார்ந்தவர் என்பதும்., குழந்தையை வளர்த்தவர் முஸ்லீம் மதத்தை சார்ந்தவர் என்பதும் தெரியவந்ததுள்ளது.

முஸ்லீம் பெண்ணின் இல்லத்தில் அக் குழந்தை வளர்ந்துள்ளதுடன் பாடசாலைக்கும் கல்விபயில அனுப்பியுள்ளார்.

இப் பிரச்சினையை தீர்க்க முடியாத பொலிஸார் வழக்குப் பதிவு செய்தது.வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்ற போது தன்னை வளர்த்த தாயிடம் செல்வதற்கே குழந்தை விருப்பம் தெரிவித்த போதும் பெற்ற தாய் இதற்கு மறுப்புத் தெரிவித்ததால் குழந்தையை சிறுவர் இல்லத்தில் சேர்க்க கூறி நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர்.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-