News Update :

Saturday, February 9, 2019

TamilLetter

அமைச்சர் ஹரிஸ் அவர்களுக்கு நன்றி தெரிவித்த அதாஉல்லாவின் கட்சி தவிசாளர்



உள்ளுராட்சி மாகாண சபைகள் இராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் கிழக்கு மாகாணத்திலுள்ள உள்ளுராட்சி மன்றங்களின் இன்றைய அத்தியவசிய தேவைகளில் ஒன்றான compactor இயந்திரங்களை தனது அமைச்சின் மூலம்  பெற்றுக் கொடுத்துள்ளார்.

இதில் அரசியல் மற்றும் பிரதேச வாதங்களைக் கடந்து முஸ்லிம் உள்ளுராட்சி சபைகள் நன்மையடைய வேண்டுமென்பதே சட்டத்தரணி ஹரீஸ் எம்.பியின் பிரதான நோக்கமாகும்.

இந் நோக்கத்தின் அடிப்படையில் குறிப்பிட்ட இயந்திரம் அக்கரைப்பற்றுக்கும் வழங்குவதற்கு அமைச்சரினால் பட்டியலிடப்பட்டிருந்தது.

பட்டியலில் பிரதேசங்களின் பெயர்கள் மாத்திரதே குறிப்பிடப்பட்ட  நிலையில் மாநகர சபையும் பிரதேச சபையும் அக்கரைப்பற்றின் பெயரில் இருந்த காரணத்தினால் அக்கரைப்பற்று பிரதேச சபையின் பெயர் அச்சிடப்பட்டிருந்தது.

முஸ்லிம் காங்கிரஸால் வழங்கப்படும் இவ் இயந்திரத்தை ஜீரணிக்க முடியாத சில தேசிய காங்கிரஸின் ஆதரவாளர்கள் தவிசாளர் வேண்டிக் கொண்டதற்கிணங்க ஜனாதிபதியினால்தான் வழங்கப்படுகின்றது என பிரச்சாரம் செய்ய ஆரம்பித்தனர்.

தேசிய காங்கிரஸின் இந்த போலிப் பிரச்சாரத்தினால் ஆத்திரமடைந்த அக்கரைப்பற்று முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்கள் ஜனாதிபதியினால் வழங்கப்படும் compactor இயந்திரத்தை ஜனாதிபதியிடம் பெற்றுக் கொள்ளுங்கள் என்று கூறி அவ் இயந்திரத்தை அக்கரைப்பற்று மாநகர சபைக்கு மாற்றினர்.

இதை அறிந்த அக்கரைப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ.றாசீக் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவத்திடம் சுமுகமான பேச்சு வார்த்தை நடாத்தி மீண்டும் அவ் இயந்திரத்தை பிரதேச சபைக்கே கொண்டு வந்துள்ளார்.

அத்தோடு இவ் இயந்திரத்தை வழங்கிய இராஜாங்க அமைச்சர் ஹரீஸ் அவர்களுக்கும் அவரது கட்சியினருக்கும் அக்கரைப்பற்று பிரதேச சபைத் தவிசாளர் தனது நன்றியை தெரிவித்திருந்தார்.




TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-