News Update :

Monday, February 4, 2019

TamilLetter

இன்று நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம் – மாகாண சபைகள், உள்ளூராட்சி அமைச்சுக்கு அதிக நிதி


 2019ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்துக்கான நிதி ஒதுக்கீட்டு சட்டமூலம் இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

இதன்படி  அரசாங்கத்தின் மொத்த செலவினம் ,2312 பில்லியன் ரூபாவாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

இதில்,  அதிகபட்சமாக பாதுகாப்பு அமைச்சுக்கு, 390.3 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. அதையடுத்து, உள்நாட்டு விவகார மற்றும் மாகாண சபைகள், உள்ளூராட்சி அமைச்சுக்கு, 290.2 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

13.55 பில்லியன் ரூபா, அதிபர் செயலகத்துக்கும், 1.62 பில்லியன் ரூபா பிரதமர் செயலகத்துக்கும், 950 மில்லியன் ரூபா எதிர்க்கட்சித் தலைவர் செயலகத்துக்கும், நாடாளுமன்றச் செலவினங்களுக்கு, 3.58 பில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளன.

தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு  4.84 பில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-