News Update :

Sunday, February 10, 2019

TamilLetter

நாளை விசாரிக்கப்படுகிறார் அக்கரைப்பற்று மேயர் அதாஉல்லா அகமட்ட சக்கி

நாளை விசாரிக்கப்படுகிறார் அக்கரைப்பற்று மேயர் அதாஉல்லா அகமட்ட சக்கி

யு.எல். றிஸ்வான்

நல்லாட்சி அரசாங்கத்தின் தேசிய வேலைத்திட்டமான கம்ரெலிய திட்டத்தை அக்கரைப்பற்று பிரதேசத்தில் செயற்படுத்துவதற்கு அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக தடை ஏற்படுத்தியதாக அக்கரைப்பற்று மாநகர சபை மேயர் மற்றும் ஆணையாளர் ஆகியோருக்கெதிராக சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென்று முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

மக்களின் நன்மை கருதி அம்பாரை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களின் நிதி மற்றும் அமைச்சுக்களின் நிதி மூலம் அக்கரைப்பற்று பிரதேச உள்ளக வீதிகளை அமைப்பதற்கு சுமார் 35 மில்லியன் ரூபா வழங்கப்பட்ட நிலையில் அவ்வீதிகளை அமைப்பதற்கு மாநகர சபை கரிசனை காட்டாத நிலையில் அந் நிதி திரைசேரிக்கு திரும்பி சென்றுள்ளதாக கூறப்படுகின்றது.

இப்படியான நிலையில் மீண்டும் நடப்பாண்டிற்கு சுமார் 80 மில்லியன் ரூபா கம்ரெலிய திட்டத்தின் மூலமும் உள்ளுராட்சி மாகாண சபைகள் மற்றும் நகர திட்டமிடல் அமைச்சுகளின் மூலம் 100 மில்லியன் ரூபா நிதியும் வழங்கப்படுவதற்கான தயார் படுத்தலில் இவ் அமைச்சுக்கள் ஈடுபட்டுள்ளன.

கடந்த ஆண்டைப் போல் இந்தாண்டும் அக்கரைப்பற்று மக்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதி மீண்டும் திரும்பி சென்று விடுமா? என்ற அச்சம் எல்லோருக்கும் ஏற்பட்டுள்ளது.இதனை தடுக்கும் முகமாகவே அக்கரைப்பற்று மாநகர சபைக்கு எதிராக குற்றம் சுமத்தப்படடு முறைப்படும் செய்யப்பட்;டிருந்தது.

இக்குற்றச்சாட்டை நன்கு விளங்கிக் கொண்ட அரசாங்கம்; இக் குற்றச்சாட்டை விசாரிக்கும் நோக்கில் கிழக்கு மாகாண ஆளுநரின் செயலாளரின் தலைமையில் ஒரு குழுவை நியமித்துள்ளது.

இக் குழு நாளை சம்மாந்துறை மஜீட் மண்டபத்தில் 2.00 மணிக்கு விசாரணைக்காக ஆஜராகுமாறு அக்கரைப்பற்று மாநகர சபை மேயர் மற்றும் அதனைச் சார்ந்த அதிகாரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அக்கரைப்ப்று மாநகர சபை உறுப்பினர் எம்மிடம் தெரிவித்தார்.


TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-