News Update :

Friday, February 1, 2019

TamilLetter

மாணவனை தாக்கிய குற்றச்சாட்டில் ஆசிரியைக்கு 2 வருட சிறைத் தண்டனை

 
 
பாடசாலை மாணவர் ஒருவரைத் தண்டித்த குற்றச்சாட்டின் பேரில் பாடசாலை ஆசிரியை ஒருவருக்கு குருணாகல் மஜிஸ்ட்ரேட் நீதிமன்றம்  கடுமையான வேலையுடன் கூடிய இரண்டு வருட சிறைத் தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.
 
55 வயதுடைய குருணாகல் நகரிலுள்ள ஆசிரியை ஒருவருக்கே  இவ்வாறு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. ஒரு லட்சம் ரூபா தண்டப் பணத்தைச் செலுத்துமாறும் குருணாகலை மஜிஸ்ட்ரேட் நீதிபதி மேனகா விஜேசுந்தர குறித்த ஆசிரியைக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இந்த ஆசிரியையினால் கடந்த 2011 ஆம் ஆண்டு மாணவன் ஒருவன் தாக்கப்பட்டமைக்கான வழக்கின் தீர்ப்பே இவ்வாறு இன்று வழங்கப்பட்டுள்ளது

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-