News Update :

Thursday, January 17, 2019

TamilLetter

மக்களின் வாக்குரிமை இழுத்தடிப்பு கவலையளிக்கிறது: மஹிந்த தேசப்பிரிய



நாட்டில் தேர்தல் நடத்தப்படாமல் மக்களின் வாக்குரிமை இழுத்தடிப்புச் செய்யப்படுவது பெரும் கவலையளிக்கின்றதென தேர்ததல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

தேர்தல் தொடர்பில் கூட்டு எதிரணி உறுப்பினர்களுடன் மஹிந்த தேசப்பிரிய நேற்று (வியாழக்கிழமை) கலந்துரையாடலொன்றில் ஈடுபட்டார்.

அதனைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே மஹிந்த தேசப்பிரிய இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் தொடர்ந்து கூறுகையில்,

“மாகாண சபைத்தேர்தலை பழைய முறைப்படி நடத்துவதே சிறந்தது. அந்தவகையில் தேர்தலை நடத்துவதற்கு நீதிமன்றத்தின் ஊடாக எவராவது நடவடிக்கைகளை மேற்கொள்வாராயின் அது வரவேற்கத்தக்கதோர் விடயமாகும்.

மேலும் தேர்தலை நடத்தாமல் கால தாமதம் ஏற்படுத்துகின்றமையினால் மக்களின் வாக்குரிமையே இழுத்தடிப்புக்கு உள்ளாகின்றது” என மஹிந்த தேசப்பிரிய சுட்டிக்காட்டியுள்ளார்.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-