News Update :

Sunday, January 27, 2019

TamilLetter

அக்கரைப்பற்று ஷியா முகம்மட் கிரிக்கட் சம்பியனாக லண்டனில் தெரிவு



அக்கரைப்பற்று ஷியா முகம்மட் கிரிக்கட் சம்பியனாக லண்டனில் தெரிவு


அக்கரைப்பற்றைச் சேர்ந்த உவைஸ்  ஷியா முகம்மட் லண்டனில் நடைபெரும் சம்பியன் கிண்ண கிரிக்கட் சுற்றுப் போட்டித் தொடரில் கலந்து கொண்டு போட்டித் தொடரின் சிறப்பு ஆட்டக்காரராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

ஷியா முகம்மட்டின் தந்தை உவைஸ்  அக்கரைப்பற்று பிராந்திய கழகங்களுக்கு உதைப்பந்தாட்ட கோல் காப்பாளராக இருந்து வந்துள்ள நிலையில் அவரது மகன் கிரிக்கட்டில் ஆர்வம் கொண்டு சாதனை படைத்து வருவது பாராட்டத்தக்கது.

அத்தோடு அவரது தாய் மாமன் அலியார் நவாஸ் இலங்கை உதைப்பந்தாட்ட தேசிய அணிக்கு   விளையாடி நாட்டிற்கும் அக்கரைப்பற்றுக்கும் பெருமை தேடித்தந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-