News Update :

Sunday, January 27, 2019

TamilLetter

இராஜாங்க அமைச்சர் ஹரிஸோடு இணையும் ஓலுவில் பாலமுனை மக்கள்

 இராஜாங்க அமைச்சர் ஹரிஸோடு இணையும் ஓலுவில் பாலமுனை மக்கள்

எஸ்.எல்.கியாஸ்தீன்

சுய ஒழுக்க விழுமியங்களோடு நேர்த்தியான முறையில் அரசியல் செய்து வருவது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவர் இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி ஹரீஸ் எம்.பியே சாரும்.

அந்த அடிப்படையில் பிரதேசங்களின் சூழலுக்கு ஏற்ப திட்டங்களை இனம்கண்டு நடைமுறைப்படுத்துவதற்கான கிராம மட்ட கலந்துரையாடல்கள் ஹரீஸ் எம்.பியின் தலைமையில் தற்போது நடைபெற்று வருகின்றது.

அட்டாளைச்சேனை பிரதேச அபிவிருத்தி தொடர்பாக ஆராயும் கூட்டம் கிரீன் பிளா ஹொட்டலில் நடைபெற்றது. இதில் அட்டாளைச்சேனை பிரதேச சபைத் தவிசாளர் உட்பட கட்சியின் முக்கிய உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சினால் இவ்வருடம் நடைமுறைப்படுத்தும் வேலைத்திட்டங்கள் தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டதுடன் பிரதேச முக்கியஸ்தர்களின் ஆலோசனையும் பெறப்பட்டன.

இதன் போது கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கருத்து தெரிவிக்கையில் இராஜாங்க அமைச்சர் ஹரீஸ் அவர்களின் தலைமையின் கீழ் தொடர்ச்சியாக செயற்படப் போவதாகவும் மக்களை ஏமாற்றும் அரசியல் வாதிகளுக்கு எதிர்காலத்தில் தக்க பதிலடி வழங்கப்படும் என தெரிவித்தனர்.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-