News Update :

Tuesday, January 22, 2019

TamilLetter

மகிந்த ராஜபக்ச சவால் - இதில் வெற்றி அடைவாரா?



எதிர்க்கட்சித் தலைவர் செயலகத்தில் இருந்து வெளியேறி விரைவில் பிரதமர் செயலகத்துக்குச்  செல்வேன் என்று சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் மூன்றாவது மாடியில் உள்ள எதிர்க்கட்சித் தலைவரின் செயலகத்தில் மகிந்த ராஜபக்ச நேற்று கடமைகளைப் பொறுப்பேற்றார்.

இதன்போதே அவர் எதிர்க்கட்சித் தலைவர் செயலகத்தில் இருந்து  மீண்டும் இரண்டாவது மாடியில் உள்ள  பிரதமர் செயலகத்துக்கு விரைவில் திரும்பி வருவதற்கான எல்லாவற்றையும் செய்வேன் என்று மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் 17 ஆவது எதிர்க்கட்சித் தலைவராக மகிந்த ராஜபக்ச தற்போது இருக்கிறார். இவர் எதிர்க்கட்சித் தலைவராக பதவியேற்பது இது இரண்டாவது முறையாகும். ஏற்கனவே, 2004இல் இவர் இந்தப் பதவியை வகித்திருந்தார்.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-