News Update :

Thursday, January 31, 2019

TamilLetter

முஸ்லிம் காங்கிரஸை மீண்டும் கட்டியெழுப்ப ஆரம்ப கால போராளிகள் ஆயத்தம் - ஒலுவிலில் ஒன்றுகூடல்




சுமார் 20 ஆண்டுகாலத்திற்கு மேலாக முஸ்லிம் காங்கிரஸின் வளர்ச்சிக்காக அரும்பாடுபட்ட கட்சியின் முக்கிய ஆரம்ப கால போராளிகள் ஒன்றிணைந்து மீண்டும் கட்சியை வலுப்படுத்துவதற்கு தீர்மானித்துள்ளனர்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்குள் புதிதாக இணைந்து பதவிகளை பெற்றுக் கொள்ளும் ஒரு சிலரால் கட்சியின் ஆரம்ப கால உறுப்பினர்கள் புறக்கனிப்பட்டு  வருவதால் கட்சியின் வாக்கு சரிவதற்கான முதற் காரணமாகவே அமைகின்றது.

இதனை நிவர்த்தி செய்யும் பொருட்டு சுயநலமற்ற சுமார் 20 வருடங்களுக்கு மேற்பட்ட அரம்ப கால கட்சிப் போராளிகள் ஒரு குழுவாக இயங்குவதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது.

அந்த அடிப்படையில் குழு அமைப்பதற்கான ஒள்றுகூடல் மிக விரைவில் ஒலுவில் கிரீன் விளாவில் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன.

கட்சியின் தேசியத் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் இந் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொள்ளவிருக்கின்றார்.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-