News Update :

Wednesday, January 23, 2019

TamilLetter

அட்டாளைச்சேனையில் மறைக்கப்படும் ஹரீஸ் எம்.பியின் சேவைகள்

அட்டாளைச்சேனையில் மறைக்கப்படும் ஹரீஸ் எம்.பியின் சேவைகள்

ஆர்.எம்.ஹனிபா




ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும் இராஜாங்க அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் முஸ்லிம் சமூகத்தின் உரிமைசார் போராட்டங்களில் முன்னிற்று செயற்படுத்தும் அதே வேளை நிலையான அபிவிருத்தி திட்டங்களை வடிவமைத்து செற்படுத்துவதிலும் தனது ஆர்வத்தை காட்டி வருகின்றார்.

பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் தான் பதவி வகித்த காலம் தொட்ட இன்றுவரை அட்டாளைச்சேனை பிரதேசத்திற்கு பல கோடி ரூபாய் நிதிகளை அபிவிருத்தி திட்டங்களுக்காக வழங்கியிருந்த போதும் இத் திட்டங்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ்தான் நிதியொதுக்கீடு செய்துள்ளார் என்பது தொடர்பான செய்திகள் மக்களுக்கு சென்றடையவில்லை என்பது வேதனையான விடயமாகவுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸிடம் சென்று அவரின் நிதியுதவிகளை பெற்று திட்டங்கள் நடைமுறைப்படுத்தும் போது அவரின் நாமத்தை மறந்து விடுகின்றனர்.

இறுதியாக நடைபெற்ற கம்பரெலிய திட்டத்தில் ஒவ்வொறு பிரதேச சபை உறுப்பினர்களுக்கும் ஹரீஸ் எம்.பியினால் நிதியுதவி வழங்கப்பட்ட போதும் எந்த உறுப்பினரும் இதுவரை இத் திட்டம் தொடர்பாக மக்களுக்கோ ஊடகங்களுக்கோ தெரியப்படுத்தவில்லை என்பது ஹரீஸ் எம்.பியின் ஆதரவாளர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

ஹரீஸ் எம்.பியினால் ஒதுக்கப்படும் நிதியை தான் ஒதுக்கியதாக சில அரசியல் வாதிகள் உரிமை கோருவது கண்டனத்துக்குறிய விடயமாகுமென கூறப்படுகின்றது.

எனவே பிரதேச அபிவிருத்திக்காக யார் நிதி ஒதுக்கீடு செய்தாலும் ஒதுக்கிய நபரை வாழ்த்துவதோடு மக்களுக்கும் நிதியொதுக்கியவரின் விபரத்தை தெரிவிப்பது முறையானது என மக்கள் தெரிவிக்கின்றனர்.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-