News Update :

Wednesday, January 30, 2019

TamilLetter

அதாஉல்லாவும் - ஹரீஸ் எம்பியும் கைது செய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவர்களும்



அதாஉல்லாவும் - ஹரீஸ் எம்பியும்  கைது செய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவர்களும்

வஹாப்தீன் - அக்கரைப்பற்று

சுற்றுலா சென்ற பல்கலைக்கழக மாணவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் இதுவரைக்கும் அவர்களது கைது தொடர்பாகவும் விடுதலை தொடர்பாகவும் வாய் திறக்காத ஓர் அரசியல் தலைவர் தேசிய காங்கிரஸின் தேசியத் தலைவர் அதாஉல்லா மாத்திரமே.

அதாஉல்லா அதிகாரத்தில் இருந்த போதும் அதிகாரமற்ற நிலையிலும் சமூகம் நலன்களில் எவ்விதமான ஆர்வத்தையும் காட்டுவதில்லை என்பது அவர் மீது வைக்கும் பெரும் குற்றச்சாட்டு.

தன்னை தேசியத் தலைவர் மற்றும் கிழக்கின் தளபதி என அவரின் அதரவாளர்களால் கூறிக் கொள்ளும் அதாஉல்லா இக்கட்டான சூழ்நிலையில் முஸ்லிம் சமூகம் அகப்படும் போது மௌனமாக தன்னை காத்துக் கொள்வதில் கெட்டித்தனமானவர்.

இராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் சிறைச்சாலைக்கு மற்றும் சம்மந்தப்பட்ட அமைச்சர்,அதிகாரிகள் என பல பேரிடம் சென்று இம்; மாணவர்களை விடுதலை செய்யுமாறு கோரிக்கைவிடுத்து வருகின்றார்.

கிழக்கில் ஆளுநரை நியமித்தது நாங்கள்தான் எங்கள் ஆலேசனையின் பெயரில்தான் ஜனாதிபதி  இயங்குகிறார் என மார்தட்டும் தேசிய காங்கிரஸின் ஆதரவாளர்கள் ஏன் உங்களது தலைவர் அதாஉல்லா  இம் மாணவர்களின் விடுதலை தொடர்பாக எந்த அக்கறையும் காட்டவில்லை என்பதை கூறமுடியுமா?

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-