News Update :

Monday, January 14, 2019

TamilLetter

வாய்ப்பை இழக்கும் அம்பாரை மாவட்ட எம்.பி

      வாய்பை இழக்கும் அம்பாரை மாவட்ட எம்.பி



பெரும்பான்மையற்ற அரசாங்கம் இன்று ஆட்சியிலிருந்து கொண்டிருக்கும் நிலையில் பாராளுமன்றம் எந்த நிமிடமும் கலையலாம் என்ற நிலையில் அடுத்த பொதுத் தேர்தலுக்கான நடவடிக்கைகளில் கட்சிகளும் வேட்பாளர்களும் தம்மை தயார்படுத்தி வருகின்றனர்.

இதற்கிடையில் அம்பாரை மாவட்டத்தில் பழைய மற்றும் புதுமுகங்கள் பொதுத் தேர்தலில் களமிறங்குவதற்கான நடவடிக்கைகளில் தீவிரம் காட்டி வருவதுடன் பிரதேச வாதத்தின் மூலம் தமது இடத்தை தக்க வைப்பதற்கான அழுத்தத்தையும் தலைமைக்கு கொடுத்து வருகின்றனர்.

தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர்கள் மீது நம்பிக்கை இழந்து விட்டதாகவும் புதியவர்களை நியமிக்குமாறும் கட்சியின் தலைமைக்கு இம் மாவட்ட முக்கியஸ்தர்களும் ஆதரவாளர்களும் உரத்து குரல் கொடுத்து வருவதையும் காணக் கூடியதாகவுள்ளது.
இந்த நிலையில் அம்பாரை மாவட்டத்திலுள்ள தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு அடுத்த தேர்தலில் போட்டியிடுவதற்கு அக்கட்சியின்; தலைமை சந்தர்ப்பத்தை  வழங்காது என்று நம்ப முடிகின்றது.

அண்மையில் தேசிய அரசியலில் ஏற்பட்ட மாற்றங்களில் குறிப்பிட்ட பாராளுமன்ற உறுப்பினர் நடந்து கொண்ட மோசமான செயற்பாடு  தலைமைக்கு எரிச்சலூட்டியதுடன் சங்கடத்தையும் ஏற்படுத்தியது.
எரிச்சலடைந்த தலைவர் இப் பாராளுமன்ற உறுப்பினரை அரசியலிருந்தும் கட்சியிலிருந்தும் அகற்றுவதற்;கு பொதுத் தேர்தலை எதிர்பார்த்து சாணக்கியமாக காய்களை நகர்த்தி வருகின்றார்.

ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் அதிகாரத்துக்கு வந்த இப் பாராளுமன்ற உறுப்பினர் மீது கட்சியின் முக்கிய மூத்த நிர்வாகிகளும் கட்சியின் அடிமட்ட சாதாரண போராளிகளும் அதிர்ப்தியில் இருந்து வருவது கட்சியின் தலைமைக்கு இவர்மீது நடவடிக்கை எடுப்பதற்கு சாதகமான சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது.

இதற்காக குறிப்பிட்ட பாராளுமன்ற உறுப்பினரின் பிரதேச முக்கியஸ்தர்களை வைத்தே இவர் மீது நடவடிக்கை எடுக்க தலைமை தாயாராகி வருகின்றது.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-