News Update :

Thursday, January 31, 2019

TamilLetter

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸுடன் தேசிய அரசாங்கம் - சரத் பொன்சேகா எம்.பி.



தேசிய அரசாங்கம் அமைக்கப் போவது ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸுடன் அல்லவெனவும், யானைச் சின்னத்தில் போட்டியிடாத முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களுடனே எனவும் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா எம்.பி. தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து வரவுள்ள குழுவும் இதற்கு ஒத்துழைப்பு வழங்கவுள்ளது. அரசியலமைப்புக்கு அமைய இந்த கூட்டரசாங்கம் அமைக்கப்படவுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.

நிகழ்வொன்றின் பின்னர் நேற்று (31) ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.   

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-