News Update :

Wednesday, January 23, 2019

TamilLetter

மாகாண சபைத் தேர்தலில் தோல்வியடைவோம் என ஐக்கிய தேசியக் கட்சிக்கு அச்சம்


 மாகாணசபைத் தேர்தல் தொடர்பான அச்சத்தினாலேயே, எல்லை நிர்ணய ஆய்வறிக்கையை ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்க, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தயக்கம் காட்டி வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்

கொழும்பில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர், “நாட்டில் தேர்தல்கள் உரிய நேரத்தில் நடத்தப்பட வேண்டும் என்று நாம் தொடர்ந்தும் வலியுறுத்திக்கொண்டு வருகிறோம்.

பெரும்பான்மையான மாகாணசபைகளின் காலம் முடிவடைந்துவிட்டன. இவற்றுக்கானத் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டிய பொறுப்பும் அரசாங்கத்துக்கு இருக்கிறது. எனினும், இது எப்போது இடம்பெறும் என்ற சந்தேகம் இன்னும் நீடித்துக்கொண்டே இருக்கிறது.

ஐக்கிய தேசியக் கட்சி இதுவரை இந்தத் தேர்தல் தொடர்பில் உத்தியோகபூர்வமாக எந்தவொரு கருத்தையும் கூறவில்லை. அதைவிடுத்து, ஜனாதிபதித் தேர்தலை நடத்த வேண்டும் என்றுதான் அவர்கள் வலியுறுத்திக்கொண்டிருக்கிறார்கள்“ என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-