News Update :

Friday, January 25, 2019

TamilLetter

அக்கரைப்பற்றில் அதிரடியாக களமிறங்கும் அமைச்சர் ரிஷாட் பதியுதீன்

அக்கரைப்பற்றில் அதிரடியாக களமிறங்கும் அமைச்சர் ரிஷாட் பதியுதீன்

வஹாப்தீன்

அக்கரைப்பற்று மாநகர சபை எல்லைக்குட்பட்ட 12 வட்டாரங்களிலும் அபிவிருத்தியினை மேற்கொள்ளுமுகமாக, அ.இ.ம.காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி எஸ்.எம்.  இஸ்மாயில் அவர்கள் கிராமிய அபிவிருத்தி நிதி ஒதுக்கீட்டின் கீழ் ஒவ்வொரு வட்டாரத்துக்கும் தலா இரண்டு மில்லியன் வீதம், இரண்டு கோடியே நாற்பது லட்சம் (2,40,00,000/=)  ரூபா நிதியை ஒதுக்கீடு செய்துள்ளார்.

திட்டம் தொடர்பாக ஆராயும் கூட்டம் நேற்றிரவு பிரதேச அமைப்பாளர் பாஸீத் தலைமையில். ஒன்றிணைந்த வட்டாரங்களின் செயற் குழுவினர் , திட்டம் உரிய  பயனாளிகளுக்கு முளுமையாக சென்றடைய வேண்டிய வழிவகைகள் தொடர்பாக கண்டறியப்பட்டன.
 

அ.இ.ம.காங்கிஸானது, கடந்த பொதுத்தேர்தலிலே முதன்முதலாக அம்பாரை மாவட்டத்திலே கால்பதித்து 33,000 வாக்குகள் பெற்று சாதனை படைத்திருந்தது.
 

அவ்வமயம் கட்சியின் தலைவர் கௌரவ ரிசாட் பதியுதீன் அவர்கள் வழங்கிய வாக்குறுதிக்கமய அம்பாறை மாவட்டத்துக்கு ஒரு பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தினை வழங்கி,  மாவட்டத்தினை கௌரவப்படுத்தியிருந்தது.
 

மாவட்டத்தின் சகல பிரதேச மக்களும் பயன் பெறும் வாய்ப்பினை கட்சி வழங்கியதனூடாக , ACMC யானது மக்களின் மனங்களிலே தடம் பதித்துவிட்டது என்பதிலே எவ்வித ஐயமுமில்லை.
 

அ.இ.ம.காங்கிரஸின் தலைவர் கௌரவ ரிசாட் பதியுதீன் அவர்கள் ....
சமூகம் சார்ந்த அரசியலுடன் அபிவிருத்தி அரசியலும் சாதனையாளர் என்பது உலகறிந்த விடயமே....

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-