News Update :

Sunday, January 20, 2019

TamilLetter

சந்திரிகாவுக்கு அமைச்சர் பதவி? ஐக்கிய தேசியக் கட்சியின் புதிய யுக்தி



ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 12 உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்பட தீர்மானித்துள்ளதாகவும்,முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவுக்கு முக்கிய அமைச்சு பதவி ஒன்றை வழங்குவதற்கு கலந்துரையாடப்பட்டுள்ளதாகவும், சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.


தற்போது ஆளும்கட்சியுடன் இணைந்து செயற்படும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்கள் 6 பேரில் 4 பேரும் புதிய அணியுடன் இணையவுள்ளனர். பியசேன கமகே மற்றும் லக்ஷமன் செனவிரத்ன ஆகிய உறுப்பினர்கள் இருவரும் நேரடியாக ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைவதற்கு தீர்மானித்துள்ளனர்.

நாடாளுமன்றத்தில் சுயாதீனமாகும் குழுவிற்கு தலைமைத்துவம் வழங்குவதற்காக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய பட்டியலில் நாடாளுமன்றத்திற்குள் நுழையவுள்ளார்.

அதன் பின்னர் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஐக்கிய தேசிய கட்சி மீண்டும் இணைந்து தேசிய அரசாங்கம் ஒன்று உருவாக்கப்படவுள்ளது. அதன் போது அமைச்சு பதவிகள் அதிகரித்து கொண்டு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவுக்கு முக்கிய அமைச்சு பதவி ஒன்றை வழங்குவதற்கு கலந்துரையாடப்பட்டுள்ளதாகவும் குறித்த ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-