News Update :

Tuesday, January 29, 2019

TamilLetter

இந்திய முஸ்லிம்களின் நம்பிக்கையாக ஹரீஸ் எம்.பி மாறியுள்ளார்

 இந்திய முஸ்லிம்களின் நம்பிக்கையாக ஹரீஸ் எம்.பி மாறியுள்ளார்

உள்ளூராட்சி மற்றும் மாகாண சபை இராஜாங்க அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் மாநில யூத் லீக் தலைவர் பள்ளப்பட்டி எம்.கே.முஹம்மது யூனூஸ், கரூர் மாவட்ட பொருளாளர் காஜா மொய்தீன், திருச்சி மணிச்சடர் செய்தியாளர் எம். கே. ஷாகுல் ஹமீது ஆகியோருக்கிடையிலான சந்திப்பு நேற்று (29) செவ்வாய்க்கிழமை உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சில் இடம்பெற்றது.

இலங்கை - இந்திய முஸ்லிம்கள் தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய இரு கட்சிகளின் வகிபங்கு பற்றி இதன்போது ஆராயப்பட்டது

தமிழ்நாடு மதுரையில் எதிர்வரும் பெப்ரவரி 16ம் திகதி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநில மாநாடு இடம்பெறவுள்ளது.

இம்மாநாட்டுக்கான அழைப்பினை அமைச்சர் ஹரீஸிடம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள் வழங்கி வைத்ததுடன் இதில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொண்டனர்.

இதன்போது அமைச்சர் ஹரீஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில மாநாடு வெற்றிபெற பிரார்த்திப்பதோடு கட்சியின் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொய்தீனுக்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதாகவும் இதன்போது குறித்த குழுவினரிடம் தெரிவித்தார்.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-