News Update :

Tuesday, January 29, 2019

TamilLetter

தமிழரை ஆளுநராக நியமித்திருந்தால் பெரும் போராட்டங்கள் நடத்திருக்கும்! - என்கிறார் ஹிஸ்புல்லா




கிழக்கு மாகாணத்தை கட்டியெழுப்ப வேண்டும் என்றால் முதலில் இங்குள்ள இனங்களுக்கிடையிலான முரண்பாடுகள் தீர்க்கப்பட வேண்டுமென கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா குறிப்பிட்டுள்ளார்.நான் ஆளுநர் பதவியை ஏற்றபோது சில சகோதரர்கள் எதிர்ப்பு தெரிவித்தார்கள்.

நான் அதனை எதிர்க்கவில்லை. நியாயமானதாக கருதுகிறேன்.
தமிழர் ஒருவரை கிழக்கு மாகாணத்திற்கு ஆளுநராக நியமித்திருந்தால் சில வேளை இதைவிட மோசமான ஆர்ப்பாட்டங்கள் இடம் பெற்றிருக்கும்.
தமிழர் முஸ்லிம்களுக்கு எதிர்ப்பு என்றும் முஸ்லிம்கள் தமிழர்களுக்கு எதிர்ப்பு என்றும் சொல்லிச் சொல்லி காலத்தை கடத்தியிருக்கிறோம்.

கிழக்கு மாகாணத்தில் 80 வீதமான மக்கள் தமிழ் பேசும் மக்கள். உங்கள் மொழியில் ஆளுநருடன் பேசுவதற்கான சூழலை ஜனாதிபதி உருவாக்கித் தந்திருக்கிறார். இதற்கு நாம் ஜனாதிபதிக்கு நன்றி செலுத்த வேண்டும்.

கிழக்கு மாகாண கல்வித் திணைக்களம் ஏற்பாடு செய்த “போதைப் பொருளிலிருந்து விடுதலையான நாடு” எனும் ஜனாதிபதியின் தேசிய வேலைத்திட்டம் கல்முனை வெஸ்லி உயர்தர பாடசாலையில் பாடசாலை மண்டபத்தில் நடைபெற்றது.

இங்கு பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஆளுநர் இவ்வாறு தெரிவித்துள்ளார்

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-