News Update :

Tuesday, January 29, 2019

TamilLetter

மாகாண சபைத் தேர்தல் அறிவிப்பு - இன்று அமைச்சரவை அங்கீகாரம்

 மாகாண சபைத் தேர்தல் அறிவிப்பு - இன்று அமைச்சரவை அங்கீகாரம்

இன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இந்த ஆண்டு ஜூன் மாதத்திற்கு முன்னர் மாகாண தேர்தல்களை நடத்த வேண்டுமென அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

 ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்வைத்த முன்மொழிவின் போதே இத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதே வேளை மாகாண சபைத் தேர்தலை எந்த முறையின் நடத்துவது என்பது தொடர்பில் முரண்பாடுகள் காணப்படுகின்றன.

இதன் காரணமாக மாகாண சபைகளின் ஆயட்காலம் முடிவடைந்து இரண்டு வருடங்கள் கடந்துள்ள போதிலும் இன்னும் தேர்தல் நடத்தப்படவில்லை.

இந் நிலையில் மாகாண சபைத் தேர்தலை புதிய அல்லது பழைய முறைமையின் கீழ் நடத்த பாராளுமன்றம்   அங்கீகாரம் வழங்குமாயின் உரிய முறைக்கு அமைவாக தேர்தலை நடத்த தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தயார் என தெரிவித்துள்ளார்.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-