News Update :

Sunday, January 27, 2019

TamilLetter

இரு அமைச்சர்களின் பதவியை பறிக்க பிரதமர் ரணில் திட்டம்

 இரு அமைச்சர்களின் பதவியை பறிக்க பிரதமர் ரணில் திட்டம்

-ராம்-

ஜனாதிபதித் தேர்தலை வெற்றி கொள்ள வேண்டுமாக இருந்தால் ஐக்கிய தேசியக் கட்சியிலுள்ள தேசியப் பட்டியல் அமைச்சர்கள் தங்களது அமைச்சுப் பதவிகளை மக்களின் வாக்குகளினால் தெரிவாகியுள்ள உறுப்பினர்களுக்கு வழங்க முன்வர வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்துக்கு முன்னர் அமைச்சரவையிலுள்ள திலக் மாறப்பன மற்றும் மலிக் சமரவிக்ரம ஆகிய இரு தேசியப் பட்டியல் உறுப்பினர்களும் தமது அமைச்சுப் பதவிகளை விட்டுக் கொடுக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

அமைச்சுப் பதவியை வகிக்க தகுதியான மக்களின் வாக்குகளினால் தெரிவு செய்யப்பட்ட பாலித ரங்கே பண்டார போன்றவர்களுக்கு அமைச்சுப் பதவிகளை வழங்க வேண்டும்.

இவ்வாறு வழங்கும் போது மாத்திரமே அடுத்த தேர்தல் வெற்றியை மஹிந்த ராஜபக்ஷவுக்கோ, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கோ வழங்காமல் தவிர்க்க முடியும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-