News Update :

Thursday, January 31, 2019

TamilLetter

விண்வெளிக்கு பயணமாகும் நமது மண்ணின் பெருமைகாக்கும் மாணவி!



நமது பிரதேச  மாணவி ஒருவர் முதன்முறையாக சர்வதேச விண்வெளி ஓடத்திற்கு பயணமாகவுள்ளார்.

பிரித்தானியாவில் வசிக்கும் சியோபன் ஞானகுலேந்திரன் என்ற மாணவியே, விண்வெளி தொடர்பான கற்கைநெறியில் சிறப்பு தேர்ச்சி பெற்று விண்வெளி ஓடத்திற்கு செல்லவுள்ளார்.

பிரித்தானியாவிலுள்ள பல மாணவர்கள் விண்வெளி தொடர்பாக கல்வி கற்று வருகின்றனர்.

செயற்கை கோளை விண்வெளிக்கு ஏவுவது, விண்வெளியிலிருந்து நில அளவை செய்வது என பல துறைகளில் சுமார் 30,000 மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர். இந்நிலையில் அதீத திறமை மிக்க 2 மாணவர்களை விண்வெளிக்கு அனுப்ப பிரித்தானிய விண்வெளி ஆய்வு மையம் தீர்மானித்திருந்தது.

அதன்படி, நமது  மாணவியான சியோபன் ஞானகுலேந்திரன் திறமையாக செயற்பட்டு விண்வெளிக்கு செல்லும் இருவரில் ஒருவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

மேலும் இவருடன் இணைந்து பிரித்தானிய மாணவியான டியானாவும் சர்வதேச விண்வெளி ஓடத்திற்கு செல்லவுள்ளார்.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-