News Update :

Thursday, January 31, 2019

TamilLetter

இவ்வாண்டு தேர்தல் வருடம் - ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன



தேர்தல் வருடமான இவ்வாண்டு நாட்டில் புதிய அரசாங்கம் ஒன்றை அமைக்கின்ற ஒரு வருடமுமாகும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று  நடைபெற்ற கட்சி நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் ஜனாதிபதி இதனைக் கூறியுள்ளார்.

புதிய அரசாங்கம் அமைப்பதற்காக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தலைமையில் நாட்டை நேசிக்கும் விரிவான மக்கள் வேலைத்திட்டமொன்றை உருவாக்கி முன்னொக்கிச் செல்ல வேண்டும். இதற்காக வேண்டி சகலரும் ஒன்றுபடுமாறு சகலரிடமும் கேட்டுக் கொள்வதாகவும் ஜனாதிபதி  கூறியுள்ளார்.

தற்போதைய அரசியலில் செய்யப்பட வேண்டியது கட்சியையோ, கட்சித் தலைவர்களையோ தோற்கடிப்பது அல்ல. நாட்டுக்கும் மக்களுக்கும் எதிரான சக்தியை இனங்கண்டு அந்த சக்தியை தோற்கடிப்பதே ஆகும் எனவும் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டுள்ளார்

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-