News Update :

Wednesday, January 30, 2019

TamilLetter

முஸ்லிம் நபருக்கு வழங்காமல் தழிழ் நபருக்கு உயர் பதவியை வழங்கிய ஆளுநர் எம்.எல்.ஏ. ஹிஸ்புல்லா




கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவின் தலைவராக கிழக்கு பல்கலைக் கழகத்தின் முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் தங்கமுத்து ஜயசிங்கம் நியமிக்கப்பட்டுள்ளார்.

கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.எம்.ஹிஸ்புல்லாவினால் இந்த நியமனம் இன்று வழங்கப்பட்டுள்ளது.

இதற்கமைய நியமனங்களை வழங்குதல்,இடமாற்றங்களை செய்தல்,உயர் பதவிகளுக்கு நபர்களை நியமித்தல் உள்ளிட்ட அரசசேவைகளுடைய சகல நியமனங்களுக்கும் பொறுப்பான அதியுயர் சபையின் தலைவராக பேராசிரியர் தங்கமுத்து ஜயசிங்கம் நியமிக்கப்பட்டுள்ளார்.

கிழக்கு மாகாண ஆளுநனராக ஹிஸ்புல்லா நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கிழக்கு மாகாண தமிழ் அமைப்புக்களும்,அரசியல் வாதிகளும் குரல் கொடுத்த நிலையில் இவ் உயரிய பதவியை தமிழருக்கு வழங்கியது தமக்கான எதிர்ப்பை தனிப்பதற்காகத்தானா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-