News Update :

Wednesday, January 23, 2019

TamilLetter

கைது செய்யப்பட்டுள்ள ஒலுவில் தென்கிழக்கு பல்கலைக்கழக 7 மாணவர்கள்


ஒலுவில் தென் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் ஹொரவ்பொத்தான கிரலாகல புராதன விகாரையொன்றின் மீது ஏறி நின்று கொண்டு புகைப்படம் எடுத்ததற்காக கைது செய்யப்பட்டுள்ள ஏழு பேரையும் இன்று (24) கெப்பத்திகொல்லாவை மஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பந்தப்பட்டவர்கள் தொடர்பில் விரிவாக விசாரணைகள் ஆரம்பித்துள்ளதாக ஹொரவ்பொத்தான பொலிஸார் கூறியுள்ளனர்.
தொல்பொருள் சட்ட விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டின் அடிப்படையில் இவர்களுக்கு எதிரான விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.

தென் கிழக்கு பல்கலைக்கழக பொறியியல் பீடத்தில் இறுதியாண்டில் கல்வி கற்கும் மாணவர்கள்  7 பேரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-