News Update :

Monday, January 28, 2019

TamilLetter

சிறைச்சாலைக்கு சென்ற ஹரீஸ் எம்.பி - அதிர்ச்சியில் அரசியல்வாதிகள்


சிறைச்சாலைக்கு சென்ற   ஹரீஸ் எம்.பி - அதிர்ச்சியில் அரசியல்வாதிகள்






கிரலாகல தூபி மீதேறி புகைப்படங்கள் எடுத்தமைக்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட    பல்கலைக்கழக மாணவர்களை பார்ப்பதற்காக   மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் இன்று (28)  அனுராதபுர சிறைச்சாலைக்கு சென்றார்.

குறித்த மாணவர்களின் தற்போதைய நிலமை தொடர்பாக கேட்டறிந்து கொண்டதுடன் மாணவர்களது பெற்றோர்களுக்கும் ஆறுதல் வார்த்தைகளை கூறினார்.

அத்தோடு அனுராதபுரத்திலுள்ள தொல்பொருளியல் திணைக்களத்திற்கு விஜயம் மேற்கொண்டு அதிகாரிகளையும் சந்தித்து குறித்த மாணவர்களின் விடுதலை தொடர்பில் கலந்துரையாடினார். 

மேலும் அறிக்கை கூட விட முடியாத இன்றைய அரசியல்வாதிகளுக்கு மத்தியில் முஸ்லிம் சமூகத்திற்கு ஏற்படும் பிரச்சினைகளை களத்தில் நின்று முகம் கொடுக்கும் ஒரு சமூக தலைவனாக இராஜாங்க அமைச்சர் ஹரீஸ் செயற்படுவது அரசியலுக்கப்பால் பாராட்ட வேண்டும்


TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-