News Update :

Thursday, January 31, 2019

TamilLetter

கருணா அம்மானுக்கு பதிலடி கொடுத்த இராஜாங்க அமைச்சர் அமிரலி



கிழக்கு மாகாண ஆளுநராக ஹிஸ்புல்லா நியமிக்கப்பட்ட விடயத்தில் சம்பந்தனையும், சுமந்திரனையும் கருணா குற்றம் சாட்டி வருவது வேடிக்கையானது.

ஆளுநரை நியமதித்தது பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அல்ல. அவரது கட்சியின் தலைவரான ஜனாதிபதியே என கிராமிய பொருளாதார அபிவிருத்தி மற்றும் விவசாய நீர்ப்பாசன இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.

கருணா முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் செல்லப்பிள்ளை. இவரது கட்சியின் தலைவர் பிரதமரல்ல, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே ஆவார். அவரே கிழக்கு மாகாண ஆளுநரை நியமித்தார். இதை விடுத்து தமிழ் தேசிய கூட்டமைப்பு மீதும் சம்பந்தன் மீதும் சுமந்திரன் மீதும் அவர் குற்றம் சுமத்துவது எந்த வகையில் நியாயமாகும்?

வெறுமனே இன வாதத்தை விதைப்பதனூடாக எதையுமே அறுவடை செய்ய முடியாது.கிழக்கு அதிலும் குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டம் தமிழ், முஸ்லிம் சமூகங்கள் காலம் காலமாக ஒன்றித்து வாழுகின்ற மாவட்டம். இங்கு இரு சமூகமும் இரு கண்களைப் போன்றவை.ஒன்றை ஒன்று பிரித்து ஒரு காலமும் நிம்மதியாக வாழ முடியாது.

தேவை ஏற்படும் போது தமக்கு ஆதாயம் தேவைப்படும் போது சில அரசியல் வாதிகள் இனங்களிடையே முறுகலை உண்டு பண்ணி ஆதாயம் தேட முனைவது தொடர்ந்தேர்ச்சியாக நடந்து வருகின்ற விடயங்கள். இது குறித்து தமிழ், முஸ்லிம் சமூகங்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-