News Update :

Monday, January 28, 2019

TamilLetter

மாட்டிக் கொண்ட அக்கரைப்பற்று மாநகர சபை மேயர் அதாஉல்லா சக்கி


மாட்டிக் கொண்ட அக்கரைப்பற்று மாநகர சபை மேயர் அதாஉல்லா சக்கி

சியாம் அகமட் - காதிரியா

சாமி வரம் கொடுத்தாலும் பூசாரி தடுப்பது போல் அக்கரைப்பற்று மக்களுக்கு அரசாங்கத்தால் வரும் மேம்பாட்டுத் திட்டங்களை அதாஉல்லா தடுத்து வருகின்றார் என்பது தெட்ட தெளிவான உண்மையென மக்கள் கூற ஆரம்பித்துள்ளனர்.

கடந்த ஆண்டு கம்ரெலிய திட்டத்தின் ஊடக அக்கரைப்பற்று மாநகர சபைக்குட்பட்ட உள்ளக வீதிகளை கொங்கிரீட் வீதியாக அபிவிருத்தி செய்வதற்கு முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர்களால் ஒதுக்கப்பட்ட நிதியை பயன்படுத்த  அக்கரைப்பற்று பிரதேச செயலகம் முற்பட்ட போது அதை செய்ய விடாமல் தடுக்கப்பட்டு அந்நிதி நம் பிரதேசத்தை விட்டு நழுவிச் சென்றுள்ளது.

அதனைத் தொடர்ந்து மீண்டும் அக்கரைப்பற்று பிரதேச அபிவிருத்திக்கு கம்ரெலிய திட்டத்தின் ஊடக முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சுமார் 6.5 கோடி ரூபாவையும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினரின் 2.5 கோடி உட்பட மொத்தம் 9 ஒன்பது கோடி ரூபா இவ்வருடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

கம்ரெலிய திட்டத்தை நடைமுறைப்படுத்திய விதம்  அதிகாரிகளின் செயற்பாடு மற்றும் அரசியல் வாதிகளின் காழ்ப்புணர்ச்சி என்பன கடந்த ஆண்டின் அனுபவமாக பார்க்கப்பட்டு அதன் பலவீனங்களை கலையும் முகமாக மாவட்ட செயலகங்களில் கம்ரெலிய செயலகமொன்றை நிதியமைச்சு நிறுவியுள்ளது.

முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகளால்  இந்த ஆண்டு அக்கரைப்பற்றுக்கு பிரதேசத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதிகளை ஏதோ ஒரு காரணம் காட்டி தடுப்பதற்கு முன்னாள் அமைச்சர் அதாஉல்லாவும் அவரது மகன் மேயர் சக்கியும் திட்டமிட்டுள்ளதாக அறிய முடிகிறது.

குறிப்பிட்ட வேலைத்திட்டங்களை செய்ய விடாமல் காலம் தாழ்த்தப்படும் சந்தர்ப்பத்தில் அவர்களுக்கு எதிராக மாவட்ட செயலகத்தினால் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதுடன் பாதிக்கப்படும் மக்களுக்கு தெளிவூட்டும் நிகழ்ச்சி நிரலையும் தயாரித்துள்ளதாக சம்மந்தப்பட்ட அதிகாரி தெரிவித்தார்..

கௌரவ மேயர் அவர்களே அக்கரைப்பற்று பிரதேசத்தில் ஏராளமான வீதிகள் குன்றும் குழியுமாக காணப்படுவதுடன் நீர் நிரம்பியும் காணப்படுகின்றன. ஆக்கரைப்பற்றை அபிவிருத்தி செய்வதற்காகவும் நகரை அழகு படுத்துவதற்காகவும்தான் உங்களை இம் மக்கள் தெரிவு செய்துள்ளனர். ஆனால் இம்மக்களுக்கு வரும் நலத்திட்டங்களை ஏன் தடுத்து நிறுத்துகின்றீர்கள்?

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-