News Update :

Thursday, January 24, 2019

TamilLetter

கொலைகாரர் ஜனாதிபதி வேட்பாளராக முடியாது!- குமார வெல்கம




கொலைகார வரலாற்றைக் கொண்ட ஒருவர் ஜனாதிபதி வேட்பாளராக்கப்படக் கூடாது. ஜனநாயகத்தையும் சிறுபான்மைச் சமூகங்களின் உரிமைகளையும் மதிக்கின்ற ஒருவரே வேட்பாளராக வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம கூறியிருக்கிறார்.

இவ்வருட இறுதியில்தான் ஜனாதிபதி தேர்தல் நடைபெறும். அதற்கு முன்னர் தற்போதைக்கு அது நடைபெறுவதற்கான வாய்ப்பு இல்லை. தேர்தலுக்கான நேரம் வரும்போது பொருத்தமான வேட்பாளர் பெயர் அறிவிக்கப்படும்.

கொலைகார வரலாற்றைக் கொண்ட ஒருவர் ஜனாதிபதி வேட்பாளராக்கப்படக் கூடாது. பதிலாக ஜனநாயகத்தையும் சிறுபான்மைச் சமூகங்களின் உரிமைகளையும் மதிக்கின்ற ஒருவரே வேட்பாளராக வேண்டும்.

சிறுபான்மைச் சமூகங்களின் உரிமைகளைப் பாதுகாக்கின்ற ஒரு வேட்பாளரை நாம் நிறுத்தத் தவறினால் அந்தச் சமூகங்களைச் சேர்ந்தவர்களின் ஆதரவைப் பெறமுடியாமல் போகும். ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு தாங்கள் தயாரென்று பலர் ஏற்கனவே அறிவித்துவிட்டதால் ஜனாதிபதி வேட்பாளர் என்பது இப்போது ஒரு ஜோக் ஆகப்போய்விட்டது " என்றும் அவர் கூறினார்.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-