News Update :

Thursday, January 24, 2019

TamilLetter

முஸ்லிம் கட்சியொன்றில் இணையும் அட்டாளைச்சேனையின் முக்கிய பிரமுகர் - கதி கலங்கும் அரசியல்வாதிகள்

முஸ்லிம் கட்சியொன்றில்; இணையும் அட்டாளைச்சேனையின் முக்கிய பிரமுகர் - கதி கலங்கும் அரசியல்வாதிகள்

றிஸ்தி அகமட்

அட்டாளைச்சேனையில் வீழ்ச்சியை நோக்கி பயணிக்கும் முஸ்லிம் கட்சியொன்றின் வாக்கு வங்கியை அதிகரிப்பதற்கு அக்  கட்சியின் தலைமை நடவடிக்கை எடுத்து வருகின்றது.

கட்சியின் ஆரம்ப கால போராளிகள் கட்சி எதிர் நோக்கும் பிரச்சினை தொடர்பாக கட்சித் தலைமையுடன் விளக்கிய போதே தலைவரினால் சில முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

இதற்காக அரசியல் அனுபவமுள்ள முக்கிய அரசியல் பிரமுகர் ஒருவரை கட்சியில் உள்வாங்குவதன் மூலம் கட்சி வலுப்பெரும் என இதன் போது  ஆலோசனை கூறப்பட்டுள்ளது.

இப் பிரதேச கட்சிப் போராளிகள் தமது கட்சியில் அவரை இணைப்பதற்கு இப் பிரமுகரின் வீட்டுக்கே சென்று தமது விருப்பங்களை தெரிவித்து வருகின்றனர்.

இப் பிரமுகர் இக் கட்சியில் இணையும் போது பல முன்னேற்றகரமான செயற்பாடுகள் நடைபெறுவதோடு தலைமைக்கான வெற்றிடமும் இவரால் நிரப்பப்படுமென எதிர் பார்க்கப்படுகிறது.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-