News Update :

Wednesday, January 23, 2019

TamilLetter

முஸ்லிம் காங்கிரஸால் சட்டத்தரணி எஸ்.எம்.ஏ.கபூர் பழிவாங்கப்படுகின்றாரா?



முஸ்லிம் காங்கிரஸால் சட்டத்தரணி எஸ்.எம்.ஏ.கபூர் பழிவாங்கப்படுகின்றாரா?

ஆர். குல்ஸான் எபி

இலங்கை முஸ்லிம்கள் தனித்துவ அடையாளமுள்ள ஒரு இனம் அவர்களின் உரிமைகளை பெற்றுக் கொள்ளவதற்காக தனியான கட்சி அவசியம் என சிந்தித்த சிலரில் சட்டத்தரணி எஸ்.எம்.ஏ.கபூர் பிரதானமானவர்.

பெரும்பான்மை கட்சிகள் முஸ்லிம் சமூகத்தின் உரிமைகளை பெற்றுத்தராது என என்னிய மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப் தமது சமூகத்துக்கான அரசியல் கட்சியொன்றை நிறுவுவதற்கு முனைந்த போது முதலாவது நபராக தன்னை அஷ்ரப்போடு இணைத்தவர் சட்டத்தரணி கபூர்

முஸ்லிம் காங்கிரஸின் இரண்டாவது நபராக அடையாளப்படுத்தப்பட்ட கபூர் கட்சிக்காக தனது உழைப்பையும் நேரத்தையும் அதிகளவு செலவிட்டார் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.

கட்சியின் வரலாறு தெரியாத அஷ்ரப்பை கண்டிராத எத்தனையோ பேர் பாராளுமன்ற உறுப்பினர்களாகவும்,மாகாண சபை உறுப்பினர்களாகவும்,திணைக்கள தலைவர்களாகவும் இருந்து கொண்டு இருக்கும் நிலையில் இக் கட்சியின் ஸ்தாபக செயலாளராகவும் வெறும் ஒரு தொண்டனாகவும் தன்னை அர்ப்பணித்த சட்டத்தரணி கபூர் இன்னும் நீதிமன்றங்களின் படிகளை தொட்டுக் கொண்டிருப்பது நேர்மையான சமூகவியலாளர்களின் மன வேதனையாகவுள்ளது.

ஒவ்வொறு தேர்தல்களிலும்; முஸ்லிம் காங்கிரஸின் தேசியப்பட்டியலில் பல முறை சட்டத்தரணி கபூரின் பெயரை அன்று தொட்டு இன்றுவரை காணக்கூடியதாக இருந்த போதும் அதற்கான கௌரவத்தை இன்னும் அவர் அடையவில்லை என்பது ஆச்சிரயமான விடயமாகும்.

சட்டத்தரணி கபூருக்கான அங்கிகாரத்தை முஸ்லிம் காங்கிரஸ் இதுவரை வழங்கவில்லை என்பது அக்கட்சியின் புனிதத்துவத்தை கேள்விக்குட்படுத்தியுள்ளது என்பதுடன் அக்கட்சி விரும்பினால் யாரை வேண்டுமென்றாலும் ஏமாற்றி விடலாம் என்பது தெட்டத் தெளிவாகின்றது.

சட்டத்தரணி கபூர் அவர்களின் விடயத்தில் அட்டாளைச்சேனை மக்களுக்கும் பொறுப்புக் கூற வேண்டிய கடப்பாடு உள்ளதை வரலாறு சாட்சி சொல்லும்.

சட்டத்தரணி கபூர் அவர்கள் தனது வாழ்க்கையின் இறுதிக் கட்டத்தை எட்டிய நிலையில் அவருக்கான கௌரவத்தை வழங்காமல் இன்னும் காலம் தாழ்த்திக் கொண்டிருப்பது முஸ்லிம் காங்கிரஸ் செய்யும் வரலாற்று துரோகமாக பதிவு செய்யப்படும் என்பதில் ஐயமில்லை

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-